Top
undefined
Begin typing your search above and press return to search.

தமிழக அரசுத்துறைகளில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க தடையா? அரசு செயலரின் சுற்றறிக்கை கூறுவது என்ன?

தமிழக அரசுத்துறைகளில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க தடையா? அரசு செயலரின் சுற்றறிக்கை கூறுவது என்ன?

MahalakshmiBy : Mahalakshmi

  |  22 May 2020 11:34 AM GMT

கொரோனா நோய் தடுப்பு‌நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏற்படும் செலவினம் மற்றும் வருவாய் பற்றாக்குறை காரணமாக சில நாட்களுக்கு முன்பு அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59 ஆக உயர்த்தி தமிழக அரசு‌ அரசாணை வெளியிட்டது. இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய பணப் பயன்‌ அளிக்கும் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக ஒரு ஆண்டு காலத்துக்கு விடுபட்டுள்ளது. இம்முடிவை அரசு‌ ஊழியர் சங்கங்கள் ஆதரித்தும்‌ எதிர்த்தும் கருத்து வெளியிட்டிருந்தன. ஓய்வு பெறப் போகும் அரசு ஊழியர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தி என்றாலும் அரசு வேலையை எதிர்பார்த்து போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு இது ஏமாற்றமளிப்பதாக‌ உள்ளது.

இந்நிலையில் தமிழகஅரசின் கூடுதல் தலைமைச் செயலர் நேற்று மற்றொரு அரசாணையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளது என்னவென்றால்,

வரும் நிதி ஆண்டில் எந்த அரசு துறையிலும் எந்த ஒரு புதிய பதவியும் உருவாக்க அனுமதி இல்லை. விதிவிலக்குகளுக்கு வழிமுறைகள் வகுக்கப்படும்.





  • புதிய பொறுப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் ஏற்கனவே இருப்பவர்களைக் கொண்டு மறுவேலை வாய்ப்பு (re-deployment) முறையில் நிரப்பிக் கொள்ளலாம்
  • COVID-19சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஊதியச் செலவை ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால்,

  • புதிய பொறுப்புகளை. உருவாக்க அனைத்து துறைகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது.
  • ஏற்கனவேஉள்ள தொடக்கநிலை காலியிடங்களை நிரப்பவும் கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கும் முறையும் ஊழியர் கமிட்டி அனுமதியுடன் தொடரும்
  • பதவிஉயர்வு மற்றும் இடமாற்றம் தற்போதுள்ள நடைமுறைப்படி தொடரும்

மேலும் மிக முக்கியமான பதவிகளுக்கு மட்டும் அந்தந்த துறைகளுடன் கலந்தாலோசித்த பிறகு அறிவிப்புகளை வெளியிடலாம் என்று கூறப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் உட்பட பலரும் இது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மையை ஏற்படுத்தும் என்று விமர்சித்த நிலையில் போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து படித்துக் கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு ஏற்கனவே அறிவிப்பு ‌வெளியிடப்பட்ட காலியிடங்களுக்கான தேர்வுகள் குறித்த நேரத்தில் நடைபெறுமா அல்லது நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி தள்ளிவைக்கப்படுமா என்ற பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு மாநிலத்தின் நிதி சுமையை சமாளிக்க தேவையான முற்சிகளை எடுப்பது அரசின் கடமை என்றாலும் வருடம் முழுக்க அரசுத் தேர்வுகளுக்காகவே தங்களை தயார்படுத்திக் கொள்ளும் பல மாணவர்களின் முயற்சி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்றால் அது மிகையாகாது.

Next Story