Top
undefined
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி : பா.ஜ.க ஒன்றிய இளைஞரணி தலைவர் வெட்டிக்கொலை; பா.ஜ.க பிரமுகர்களை குறிவைத்து தாக்கும் மர்ம கும்பல்.!

புதுச்சேரி : பா.ஜ.க ஒன்றிய இளைஞரணி தலைவர் வெட்டிக்கொலை; பா.ஜ.க பிரமுகர்களை குறிவைத்து தாக்கும் மர்ம கும்பல்.!

Vignesh KBy : Vignesh K

  |  16 Sep 2020 5:29 AM GMT

ஓசூர் அருகே கெலமங்கலம் ஒன்றிய பாஜக இளைஞரணி தலைவர் ரங்கநாதன் ஓட ஓட வெட்டிக்கொலை. இந்த கொலை சம்பவத்தை பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் சாலையில் போராட்டத்தை மேற்கொண்டனர்.

ஓசூர் அருகே உள்ள குந்துமாரணப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் பாஜக ஒன்றிய இளைஞர் அணி தலைவர் பதவியில் உள்ளார். இவருடைய மனைவி கீதா. இவர்களுக்கு தனுஞ்செயா மற்றும் ருஷிகேஷ் என்கிற இரு மகன்கள் இருக்கின்றனர். ரங்கநாதனுக்கும் குந்துமாரணப்பள்ளி கிராமத்தை அடுத்த இருக்கும் போத்தசந்திரம் கிராமத்தில் உள்ள சில நபர்களுடன் முன்விரோதம் இருந்துள்ளது என தகவல் கூறப்படுகிறது.

இதை அடுத்து ரங்கநாதனின் இளைய மகன் தனுஞ்செயானின் பிறந்தநாளை அவருடைய குடும்பத்தோடு வீட்டில் கொண்டாடி இருக்கிறார். அந்த சமயத்தில் வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் தாக்குதலை துவங்கி உள்ளனர். இதன் பின்பு ரங்கநாதனை ஓட ஓட விரட்டி கொலை செய்துள்ளனர். இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே ரங்கநாதன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த கொலை சம்பவத்தில் போத்தசந்திரம் கிராமத்தில் உள்ள சில நபர்களுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.


இதை தொடர்நது ரங்கநாதனின் கொலை பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓசூர் கெலமங்கலம் சாலையில் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதை பற்றி அறிந்த தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி சங்கீதா போராட்டக்காரர்களை சமாதானம் செய்யும் பேச்சுவார்த்தையை செய்து வருகிறார்.


மேலும், கடந்த சில நாட்களாக பாஜக பிரமுகர்களை சில மர்ம கும்பல்கள் தொடர்ந்து கொலை செய்தும், தாக்குதல் நடத்தியும், மிரட்டல்கள் விடுத்தும் போன்ற வெறி செயல்களை செய்து வருகின்றனர்.

Next Story