Top
undefined
Begin typing your search above and press return to search.

தமிழக அரசுப் பள்ளி மாணவர் டேராடூன் ராணுவக் கல்லூரியில் பயில தேர்வு.!

தமிழக அரசுப் பள்ளி மாணவர் டேராடூன் ராணுவக் கல்லூரியில் பயில தேர்வு.!

VinithaBy : Vinitha

  |  17 Oct 2020 11:30 AM GMT

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர் நாட்டிலேயே சிறந்த ராணுவ கல்லூரியான உத்தரகாண்டில் உள்ள ராஷ்ட்ரிய ராணுவ கல்லூரியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயில்வதற்கான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்தியாவில் உயரிய ராணுவ கல்லூரியாக உத்தரகாண்ட் மாநிலத்தில் டேராடூனில் ராஷ்ட்ரிய ராணுவ கல்லூரி விளங்கிவருகிறது.

இங்கு உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்க வேண்டுமென்றால் நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வு எழுத்துத்தேர்வு மற்றும் உடல் தகுதித்தேர்வு என இரு கட்டங்களாக நடைபெறும்.







இவரது தந்தை செந்தில் பொங்கலூர் வட்டார கல்வி அலுவலகத்தில் கண்காணிப்பாளராக வேலை செய்து வருகிறார். அரசு ஊழியராக இருந்தும் தனது மகனை அரசு பள்ளியில் சேர்த்த தந்தையையும் தேர்ச்சி பெற்ற மாணவர் அஸ்வத்ராமையும் பள்ளியின் தலைமையாசிரியர் பழனிச்சாமி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்தத் தேர்வு பற்றிய விழிப்புணர்வு தமிழக மாணவர்களிடம் குறைவாகவே உள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் பொதுப்பிரிவினருக்கு 600 ரூபாய் எனவும் மற்ற பிரிவினருக்கு 555 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.rimc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்று எட்டாம் வகுப்பல் இந்த ராணுவ கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் இந்த தேர்வினை எழுதலாம். ஆங்கிலம், கணிதம் மற்றும் பொது அறிவு என மூன்று பாடங்களில் தேர்வு எழுத வேண்டும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இரண்டு கட்ட தேர்வுகளிலும் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்படும்‌. பின்னர் ராணுவ கல்லூரியில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவர்கள் பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

Next Story