Top
undefined
Begin typing your search above and press return to search.

தமிழக விவசாயிகளுக்கு முழுமையாக உதவும் மத்திய வேளாண் திட்டங்கள்.!

தமிழக விவசாயிகளுக்கு முழுமையாக உதவும் மத்திய வேளாண் திட்டங்கள்.!

MuruganandhamBy : Muruganandham

  |  17 Oct 2020 11:15 AM GMT

ஐந்தாம் கட்ட பொது முடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நாட்டை மீட்டுருவாக்கம் செய்வதில் விவசாயிகளின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். விவசாயிகளின் கடின உழைப்பால், நாட்டின் உணவுப் பாதுகாப்பு சிறந்த நிலையில் உள்ளது. அப்படிப்பட்ட விவசாயிகளின் நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதில் எந்த வியப்பும் இல்லை. உற்பத்தி அதிக அளவை எட்டியுள்ளதால், அரசு தொடர்ந்து உணவு தானியங்களை கொள்முதல் செய்து வருகிறது.

கொரோனா பெருந்தொற்றைத் தடுக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியம் என நிபுணர்கள் கூறுகின்றனர். அரசு ரேசன் கடைகள் மூலம் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களை இலவசமாக வழங்கி வருகிறது. இலவச உணவுப் பொருட்களை அரசு வழங்குவதால், ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை திட்டம், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

ஆற்றுப் பாசனத்துக்கு வாய்ப்பு இல்லாத இடங்களில் , பிரதமர் கிருஷி சிஞ்சாயி திட்டத்தின் கீழ், ஆழ்துளைக் கிணறுகளைப் பயன்படுத்தி குறு பாசனத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில், ரூ.398.75 கோடி மதிப்பில், வேளாண் பொருட்கள் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம், வேளாண் சந்தைப்படுத்துதல் மற்றும் வணிகத்துறை மூலம் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.


இந்தத் திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் மணச்சநல்லூர், பிடாரமங்கலம், திருச்செந்துறை, எம்.புத்தூர், அரசலூர் ஆகிய இடங்களில் வாழை முதன்மை செயலாக்க மையங்களும், மணச்சநல்லூர், பி.கே.அகரம், உப்பிலியாபுரம், துறையூர், தாத்தையங்கார் பேட்டை ஆகிய இடங்களில் வெங்காய முதன்மை செயலாக்க மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

விவசாய உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிக (மேம்பாடு மற்றும் வசதி) சட்டம் 2020, விவசாயிகள் அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு (விலை உத்தரவாதம் மற்றும் விவசாயிகள் சேவை ஒப்பந்தம்) சட்டம் 2020, அத்தியவசியப் பொருட்கள் திருத்த சட்டம் 2020 ஆகிய மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள், விவசாயிகள் மேலும் அதிக வருமானம் பெறுவதற்கு உதவும். முன்னேற்றத்தை நோக்கி நாடு பீடுநடை போடுவதற்கு மிகவும் அவசியமான வேளாண் வளர்ச்சிக்கு விவசாயிகளுக்கு உறுதியளிக்கப்பட்ட வருமானம் மிகவும் அவசியமாகும்.

Next Story