Top
undefined
Begin typing your search above and press return to search.

பழனி பஞ்சாமிர்தத்துக்கு நேரடியாக விவசாயிகளிடம் நாட்டுச் சர்க்கரை வாங்கும் பழனி தேவஸ்தானம்.!

பழனி பஞ்சாமிர்தத்துக்கு நேரடியாக விவசாயிகளிடம் நாட்டுச் சர்க்கரை வாங்கும் பழனி தேவஸ்தானம்.!

VinithaBy : Vinitha

  |  18 Oct 2020 2:30 AM GMT

கவுந்தப்பாடியில் உள்ள தமிழ்நாடு மாநில வேளாண் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைப்படுத்தல் குழுவிலிருந்து பழனி தேவஸ்தானம் நாட்டு சர்க்கரை வாங்கத் தொடங்கி இருப்பதால் ஈரோடு மாவட்டத்தில் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பழனி தண்டாயுதபாணி கோவிலின் புகழ்பெற்ற பஞ்சாமிர்த பிரசாதம் தயாரிப்பதற்காக 30 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகளிடமிருந்து நாட்டு சக்கரை மற்றும் வெல்லம் வாங்கிக் கொண்டிருந்த தேவஸ்தானம், நவம்பர் 29, 2014 முதல் விவசாயிகளிடமிருந்து நேரடியாக சர்க்கரை வாங்குவதை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது. இதனால் மீண்டும் தங்களிடமே கோவில் அதிகாரிகள் வெல்லம் வாங்க ஆரம்பித்து இருப்பது விவசாயிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேவஸ்தானத்தின் அதிகாரிகள் ஒவ்வொரு சனிக்கிழமையும் விவசாயிகளிடமிருந்து நாட்டு சக்கரை ஏலத்தின் மூலம் வாங்குவர் என்றும் ஒவ்வொரு வாரமும் 300 பைகள் (தலா 60 கிலோ) நாட்டு சக்கரை கொள்முதல் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. சபரிமலைக்கு பக்தர்கள் மாலை அணியும் காலக் கட்டத்தில் இவை மேலும் அதிகரித்து 4000 க்கும் மேற்பட்ட பைகளை தேவஸ்தானம் கொள்முதல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோபிசெட்டிபாளையம் தாலுகாவில் 70 க்கும் மேற்பட்ட கிராமங்களில் கரும்பு பயிரிடப்படுகிறது. சில விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை தனியார் மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கும் விற்பனை செய்தாலும் அவர்களில் பெரும்பாலானோர் வெல்லம் மற்றும் கரும்பின் பிற மதிப்பு கூட்டு தயாரிப்புகளை தங்களாகவே சொந்தமாக உற்பத்தி செய்கிறார்கள்.

வழக்கமாக ஒவ்வொரு வாரமும் கவுந்தப்பாடி ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைப்படுத்தல் குழு மூலம் தயாரிப்புகளை விற்பனை செய்வதாக கவிந்தபாடியில் உள்ள கரும்பு விவசாயிகள் கூறியுள்ளனர். மேலும் பழனி தேவஸ்தானம் தங்களிடம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கொள்முதல் செய்து வருவதால் பழனி தேவஸ்தானத்திற்கு என்று ரசாயனம் கலக்காத நாட்டுச் சர்க்கரையை தயாரித்து அளித்து வருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

மார்க்கெட்டிங் கமிட்டி மூலம் நாட்டு சர்க்கரை மற்றும் வெல்லம் விற்கும் விவசாயிகளுக்கு கொள்முதல் முடிந்த உடனேயே பணம் கிடைக்கும். இந்த முறையில் விவசாயிகள் ஒவ்வொரு வாரமும் லாபம் ஈட்டுவார்கள் என்பதால் லாபகரமாகவும் அதே சமயம் மனதுக்கு திருப்தி அளிப்பதாகவும் உள்ளதாக விவசாயிகள் கருதுகின்றனர். "நாங்கள் அனைவரும் எங்கள் விளைபொருட்களை கோவிலுக்கு விற்க விரும்புகிறோம்." என்று கவிந்த பாடியை சேர்ந்த பல விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சந்தைப்படுத்தல் குழுவிலிருந்து நாட்டு சக்கரை வாங்குவதை தேவஸ்தானம் நிறுத்தியதை அடுத்து விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். விவசாயிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யத் தொடங்கியதாகவும், சில விவசாயிகள் கலப்படம் செய்யப்பட்ட பொருட்களை கோயிலுக்கு விற்றதாகவும் கூறப்பட்டதால் தேவஸ்தானம் சந்தையிலிருந்து நேரடியாக வாங்க முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. தற்போது மீண்டும் தேவஸ்தானம் நாட்டுச் சர்க்கரையை நேரடியாக விவசாயிகளிடமே கொள்முதல் செய்ய முன்வந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.


Next Story