Top
undefined
Begin typing your search above and press return to search.

திருச்சி: ஆம்னி பேருந்துகள் சேவை தொடங்கியும் குறைவாகவே இயக்கப்படும் பேருந்துகள்.!

திருச்சி: ஆம்னி பேருந்துகள் சேவை தொடங்கியும் குறைவாகவே இயக்கப்படும் பேருந்துகள்.!

JananiBy : Janani

  |  17 Oct 2020 3:00 PM GMT

கொரோனா தொற்றுநோய் காரணமாகக் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்து சேவைகளும் நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த செப்டெம்பர் மாதம் பேருந்து சேவை தொடங்கப்பட்டது. அக்டோபர் 15க்கு பிறகு ஆம்னி பேருந்துகள் சேவைகள் தொடங்கப்பட்டன. இருப்பினும் திருச்சியில் வெள்ளிக்கிழமையிலிருந்து 20 சதவீதம் ஆம்னி பேருந்துகள் சேவை தொடங்கப்பட்டன.

ஆனாலும் பயணிகளின் வருகை குறைவாக உள்ளது என்று ஒரு சில ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர், மற்றும் சிலர் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை நிலுவையில் உள்ள சாலை வரியை ரத்துசெய்ய வேண்டியதற்கான வேண்டுகோளுக்கு அரசாங்கத்தின் பதிலுக்குக் காத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.



கொரோனா தொற்றுநோயின் ஊரடங்கு காரணத்தால் பயணிகளின் வரவும் குறைவாக உள்ளதால் சென்னை மற்றும் மதுரைக்குக் குறைவான அளவிலே ஆம்னி பேருந்துகள் புறப்பட்டன. "ஆம்னி பேருந்துகள் இயக்குவது குறித்து நாங்கள் ஊடகங்களில் தெரிவித்தோம், பயணிகளின் வருகையும் எதிர்பார்த்தோம். தற்போது நவராத்திரி பண்டிகையும் வருவதால் பணிகளின் வருகையும் அதிகளவில் இருக்கும் என்று நம்புகின்றோம்," என்று திருச்சி ஆம்னி பேருந்துகள் சங்கத்தின் தலைவர் R பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் இயக்கப்படும் பேருந்துகளில் 60 சதவீத பயணிகளே அனுமதிக்கப் படுகின்றனர். அனைத்து பேருந்துகளிலும் சானிடிசர்கள் வைக்கப்பட்டுள்ள, மேலும் பயணங்களில் அனைவரும் முகக்கவசங்கள் அணிவதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. "தலையணைகள் மற்றும் போர்வைகளுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளது, பயணிகளுக்குத் தேவை ஏற்பட்டால் அவர்கள் கொண்டுவரலாம். மேலும் பேருந்துகளில் உள்ள திரைகளும் அகற்றப்பட்டன. பயணங்களுக்கு முன்பும் பின்பும் பேருந்துகள் சுத்தம்செய்யப்படுகின்றன," என்றும் பாலகிருஷ்ணன் கூறினார்.

இருப்பினும், சில ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் நிலுவையில் உள்ள சாலை வரியைத் தள்ளுபடி செய்வது வரை பேருந்துகளை இயக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளனர். "இந்த வருடத்தின் பாதி நாட்கள் வேலையிழந்து இருந்தோம். ஒரு பேருந்துக்கு 4 லட்ச ரூபாய் சாலை வரி நிலுவையில் உள்ளது, இதனை எங்களால் செலுத்த முடியாது. நிலுவையில் உள்ள சாலை வரியை விரைவில் அரசாங்கம் ரத்து செய்யும் என்று நம்புகின்றோம்," என்று மேஜிக் டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அப்துல் சதர் கூறினார்.

Next Story