Top
undefined
Begin typing your search above and press return to search.

ரயில்வே காவலர்கள் 20 பேர் கொரோனாவால் பாதிப்பு - காவல் நிலையம் மூடப்படுமா?

ரயில்வே காவலர்கள் 20 பேர் கொரோனாவால் பாதிப்பு - காவல் நிலையம் மூடப்படுமா?

Vignesh KBy : Vignesh K

  |  22 May 2020 11:26 AM GMT

சென்னையிலுள்ள சென்ட்ரல் ரயில்வே காவல்துறையினர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர்கள் உட்பட 30 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்தில் உள்ள 20 பேர் காவலர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதில் 57 வயதான இரண்டு உதவியாளர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் வயது அதிகமாக உதவி ஆய்வாளர்களை வேலை பார்க்க வைத்ததால் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என குற்றச்சாட்டு வந்துள்ளது.


கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்கள் மூலம் காவலர்களின் குடும்பத்தினருக்கும் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. மேலும் சென்னை எழும்பூர் கெங்குரெட்டி ரயில்வே காவலர் குடியிருப்பில் கொரோனாவால் இதுவரை 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Source: https://www.polimernews.com/dnews/110128

Next Story