Top
undefined
Begin typing your search above and press return to search.

ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு! ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு!

ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு! ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு!

MahalakshmiBy : Mahalakshmi

  |  29 Jun 2020 2:57 PM GMT

இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுகாதாரத் துறை நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்திய நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. சுகாதாரத் துறை நிபுணர் குழு ஊரடங்கால் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் ஏற்கனவே எடுத்துள்ள நடவடிக்கைகளின் விளைவுகளை ஆய்வு செய்து மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனை கூறிய உள்ளதாகவும் தெரிவித்தது.

இந்நிலையில் தற்போது ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜுலை 5ம் தேதி வரை சென்னை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நான்கு மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்ட தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story