Top
undefined
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நிவாரண பணிகளுக்கு ரூ.7,167.97 கோடி செலவு - துணை முதல்வர் ஓ.பி.எஸ் தகவல்.!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நிவாரண பணிகளுக்கு ரூ.7,167.97 கோடி செலவு - துணை முதல்வர் ஓ.பி.எஸ் தகவல்.!

Vignesh KBy : Vignesh K

  |  15 Sep 2020 11:43 AM GMT

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா சிகிச்சை, நிவாரண வேலைகள் என மொத்தமாக ரூபாய் 7,167.97 கோடி செலவு செய்யப்பட்டதாக துணை முதல்வர் ஓ.பன்னிர் செல்வம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணத்தினால் பல நாட்களாக நடைபெறாமல் இருந்த தமிழக சட்டசபை நேற்று சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளின்படி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. நேற்று நடந்த கூட்டத்தொடரில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி மறுநாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இன்று இரண்டாம் நாள் கூட்டத் தொடர் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் கொரோனா வைரஸ் நிவாரண வேலைகளுக்கு தமிழக அரசு செலவிட்டதை பற்றி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அதில், தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கும், கொரோனா சிகிச்சைக்கும் மற்றும் கொரோனா நிவாரண வேலைகளுக்கும் என்று மொத்தமாக ரூபாய் 7,167.97 கோடி செலவு செய்யப் பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதில் மருத்துவ கருவிகளுக்கு ரூ.830.60 கோடியும், மருத்துவக் கட்டுமான வேலைக்கு ரூ.147.10 கோடியும், கொரோனா தனிமைப்படுத்தலுக்கு ரூ. 262.25 கோடியும், வெளிமாநிலத்தொழிலாளர்களின் நிதிக்கு ரூ.143.63 கோடியும் மற்றும் கொரோனா தடுப்பு சிகிச்சைக்கு ரூ. 638.85 கோடியும் செலவாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், நியாயவிலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை மற்றும் இலவச பொருள்கள் வழங்க ரூ.4,896.05 கோடி என மொத்தமாக ரூபாய் 7,167.97 கோடி செலவு செய்யப் பட்டதாக தெரிவித்துள்ளார்.

Next Story