Top
undefined
Begin typing your search above and press return to search.

"இறந்தது என் சகோதரர், நான் நலமாக உள்ளேன்" - மயிலை ஜன்னல் கடை சந்திரசேகர் #Mylai #Jannalkadai #covid19

இறந்தது என் சகோதரர், நான் நலமாக உள்ளேன் - மயிலை ஜன்னல் கடை சந்திரசேகர் #Mylai #Jannalkadai #covid19

Mohan RajBy : Mohan Raj

  |  8 July 2020 5:45 AM GMT

மயிலாப்பூரில், பிரபலமான ஜன்னல் கடை உரிமையாளர் கொரோனா தொற்றுக்கு பலியானதாக பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், "நான் நலமாக தான் உள்ளேன் தொற்றுக்கு பலியானது என் சகோதரர் என, அவர் கூறியுள்ளார்

சென்னை மயிலாப்பூர் பகுதியில் கபாலீஸ்வரர் கோவில் அருகில் பிரத்தியோக உணவு வகை கூடங்கள் ஏராளமாக இருந்தாலும் பஜ்ஜி போண்டா, கெட்டி சட்னிக்கு, 30 ஆண்டுகளாக பிரபலமானது ஜன்னல் கடை.

அதன் உரிமையாளர் சந்திரசேகர் இவரது இளைய சகோதரர் சிவராம கிருஷ்ணன், தேனாம் பேட்டையில் உள்ள மத்திய கணக்காயர் அலுவலகத்தில், ஆடிட்டராக' பணியாற்றி வந்தார்.

பணி நேரம் போக தன் சகோதரர் கடையில் காலை, மாலை வேளைகளில் உதவி செய்து வந்தார்.

நிமோனியா, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், 4ம் தேதி நள்ளிரவு மூச்சு திணறல் ஏற்பட்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைகாக சிகிச்சை பலனின்றி 5ம் தேதி அதிகாலை உயிரிழந்தார்.

அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவில், கொரோனா தொற்று உறுதியானது.

இந்நிலையில் ஜன்னல் கடை உரிமையாளர், தொற்றுக்கு பலியானதாக பல்வேறு நாடகங்களிலும் நேற்று செய்தி இருந்தது வெளியாகி இது குறித்து, ஜன்னல் கடை உரிமையாளர் சந்திரசேகரன் கூறுகையில் நான் நலமாக உள்ளேன் கடையில் எனக்கு உறுதுணையாக இருந்த, என் சகோதரரின் மரணம், எங்கள் குடும்பத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது விரைவில், இதில் இருந்து மீண்டு, ஒரு மாதத்திற்கு பின் திறக்கப்படும்," என்றார்.

மயிலை ஜன்னல் பஜ்ஜி சுடை உரிமையாளர் சகோதரரின் இறப்பு, உணவு பிரியர்கள் வட் டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story