Top
undefined
Begin typing your search above and press return to search.

சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' படத்தில் சாதி பிரச்சினையை தூண்டும் பாடல் - படத்தை வெளியிட இடைக்கால தடை கேட்ட வழக்கில் விசாரணைக்கு உத்தரவு.! #Suraraipottru #Surya

சூர்யா நடித்த

Mohan RajBy : Mohan Raj

  |  16 Sep 2020 2:00 AM GMT

நடிகர் சூர்யா நடித்துள்ள 'சூரரைப்போற்று திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் அனைத்தும் கடந்த மார்ச் மாதத்தில் வெளியானது, இதில் ஒரு பாடலில் சாதி பிரச்சினையை தூண்டும் விதமாக வரிகள் இடம்பெற்றிருப்பதாக சென்னை ஹைகோர்ட்டி'ல் தர்மபுரி மாவட்டம், அஞ்சேஹல்லி கிராமத்தை சேர்ந்த ஏ.கார்த்திக் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில் குறிப்பிடபட்டுள்ளதாவது, "சூரரைப்போற்று படத்தில் வரும் மண்ணு உருண்டை மேல.. மனுச பய ஆட்டம் பாரு" என்று தொடங்கும் பாடலில் "கீழ்சாதி உடம்புக்குள்ள ஓடுறது சாக்கடையா? அந்த மேல்சாதிகாரனுக்கு இரண்டு கொம்பிருந்தா காட்டுங்கய்யா?" என்ற வரிகள் வலிகிறது. இதில் என்னவென்றால் அனைத்து சாதியினரும் அமைதியாக வாழும் தமிழகத்தில் இதுபோன்ற வரிகள் மக்கள் மத்தியில் பிரிவினையே தூண்டும் விதமாகவும் மேலும் சட்டமன்ற தேர்தல் வருகின்ற நேரத்தில் அரசியல் கட்சிகள் இந்த பிரச்சினையை பெரிதாக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 'சூரரைப்போற்று' திரைப்படத்தை 2022'ம் ஆண்டு வரை வெளியிட தடை வேண்டும் என அந்த வழக்கின் மனுவில் குறிப்பிடபட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து மனுதாரர் கூறியதாவது, "இந்த புகாரை கடந்த மார்ச் மாதம் 20'ம் தேதி தர்மபுரி மாவட்டம் போலீஸ் சூப்பிரண்ட்'க்கு தபால் மூலம் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என தெரிவித்தார்.மேலும் இந்த வழக்கின் முகாந்திரத்தை விசாரிக்க நீதிமன்றம் போலீசுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story