கடைகள் இரவு 10 மணி வரை இயங்கலாம் - ஊரடங்கு தளர்வு அறிவிப்பு.!
கடைகள் இரவு 10 மணி வரை இயங்கலாம் - ஊரடங்கு தளர்வு அறிவிப்பு.!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் தற்போது பண்டிகை காலம் நெருங்கி வருவதால் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கடைகளை 10 மணி வரை திறந்து வைக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
மேலும் இந்த நேர நீட்டிப்பு கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற இடங்களில் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் நோய்த்தொற்று கட்டுப்பாடுகளை கண்டிப்பாக இந்த பண்டிகை காலங்களில் கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் ஒருநாள் தொடரின் இரண்டாவது அலை பரவத் தொடங்கியுள்ளது. இதனால் இந்தியாவில் வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் மக்கள் அனைவரும் விழிப்புடன் செயல்படவேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நேற்று தனது உரையில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் முக கவசத்தை அணிந்து, கைகளை சுத்தமாக கழுவும் பழக்கத்தை கடைபிடித்து மக்கள் அனைவரும் கொரோனா தொற்றினை விரட்டும் வரை இந்த வழிமுறைகளை கடைப்பிடித்து வருமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. பண்டிகைக்கால கொண்டாட்டங்களின் இதுவரை நாம் கடைபிடித்து வந்த நம் பழக்க வழக்கங்களை மாற்றிக்கொண்டால் நோயின் பிடியில் மாட்டிக்கொள்ள நேரிடும் என்பதை மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.