Kathir News
Begin typing your search above and press return to search.

சிவகாசியில் பட்டாசு தயாரிப்பு 35% குறைவு - முதலாளிகள் கவலை.!

சிவகாசியில் பட்டாசு தயாரிப்பு 35% குறைவு - முதலாளிகள் கவலை.!

சிவகாசியில் பட்டாசு தயாரிப்பு 35% குறைவு - முதலாளிகள் கவலை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Nov 2020 3:22 PM GMT

சிவகாசி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இத்தொழிலில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், பிற தொழில்கள் மூலம் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

ஆண்டுக்கு சுமார் ரூ.7 ஆயிரம் கோடி வரை பட்டாசு விற்பனை ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை ஒட்டி அதிகமான அளவில் பட்டாசு விற்பனை நடைபெறுகிறது.இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக, தமிழகத்தில் மட்டுமின்றி வட மாநிலங்களிலும் பட்டாசுக்கான ஆர்டர்கள் போதிய அளவில் இல்லை என கூறப்படுகிறது.

இதனால் முதலாளிகள் தனக்கு கீழ் வேலை பார்க்கும் வேலையாட்களுக்கு கொடுக்கவேண்டிய போனஸ் கூட சரியாக தர முடியாத நிலையில் உள்ளோம் என்று கவலையில் உள்ளனர்.



மேலும் இந்த தீபாவளிக்கு எதிர்பார்த்த அளவில் விற்பனை இல்லாததால் சிவகாசியில் பட்டாசு தயாரிப்பு 35 சதவீதமாக தற்போது குறைந்துள்ளது. கடந்த 2015 ம் ஆண்டு நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றம் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சில பட்டாசுகளை தயாரித்து தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இதில் பட்டாசு உற்பத்தி விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை இல்லை. ஆனால் பட்டாசு தயாரிக்க முக்கிய மூலப் பொருளாக பயன்படுத்தப்படும் பேரியத்துக்கும், சரவெடி தயாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.



இதனால் தற்போது அனைத்து பட்டாசு ஆலைகளில் 'பசுமை பட்டாசுகள்' மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பின் எதிரொலியாக கடந்த தீபாவளிக்கு பிறகு, சிவகாசியில் உள்ள 1,070 பட்டாசு ஆலைகளில் 3 மாதங்கள் மூடப்பட்டன. இந்த ஆண்டு அச்சுறுத்தல் காரணமாக ஒன்றரை மாதங்களாக பட்டாசு ஆலைகள் அடைக்கப்பட்டிருந்தன. அதனை தொடர்ந்து 60 சதவீத தொழிலாளர்களைக் கொண்டு பட்டாசு தயாரிக்க அரசு அனுமதி வழங்கிய நிலையில் இந்த ஆண்டு பட்டாசு தயாரிப்பு 30 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது முதலாளிகள் இடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மீனம்பட்டி பட்டாசு உற்பத்தியாளர் சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி கூறுகையில், "தமிழகத்தில் மட்டுமின்றி வட மாநிலங்களிலும் தற்போது பட்டாசுகள் போதிய அளவில் இல்லை தீபாவளிக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இதுவரை கடைகளில் பட்டாசு விற்பனை கட்டவில்லை விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லாததால் பிள்ளைகளை மூடும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது" என்று கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News