மரக்காணம் ,கடலூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று பாஜக தலைவர் எல்.முருகன் ஆறுதல்: நிவாரண பொருள்கள் வழங்கினார்!
மரக்காணம் ,கடலூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று பாஜக தலைவர் எல்.முருகன் ஆறுதல்: நிவாரண பொருள்கள் வழங்கினார்!

சென்றார் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நிவர் புயலால் சேதம் அடைந்த பகுதிகளை நேரில் பார்வையிட்ட தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். வசவன் குப்பம் என்ற மீனவ கிராமத்துக்கு சென்ற எல்.முருகன் அவர்கள் அங்கு பாதிக்கப்பட்ட பல மீனவ குடும்பங்களை சந்தித்தார். அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
மீனவர்கள் மற்றும் அங்குள்ள நரிக்குரவர் மக்களையும் சந்தித்து அவர்களுக்கு உடனடியாக தேவைப்பட்ட அரிசி உட்பட நிவாரணப் பொருள்களையும் வழங்கினார். இங்கு அடிக்கடி புயல் மற்றும் மழையால் பாதிக்கப்படுவதை தவிர்க்க புயல் பாதுகாப்பு மையம் மற்றும் படகு தளங்கள் அமைக்க தமிழக முதல்வருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
முருகன் அவர்களின் வசவன் குப்ப பயணத்தின்போது ஏராளமான மீனவ இளைஞர்கள், பெண்கள் அவரை சூழ்ந்து கொண்டு தங்கள் தேவை பிரச்சினைகள் குறித்து முறையிட்டனர். அப்போது முருகன் அவர்கள் மக்களோடு மக்களாக தரையில் அமர்ந்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
அதேபோல கடலூர் செல்லும் வழியில் பாதிக்கப்பட்டிருந்த பல பகுதி மக்களுக்கும் நிவாரணப் பொருட்களை வழங்கினார். பிறகு கடலூர் சென்ற அவர் பாதிக்கப்பட்ட பெரிய குப்பம் உள்ளிட்ட மீனவர் குப்பங்களுக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அவர்களுக்கும் அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கிய அவர் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். உடனடியாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று குறைகள் தீர்க்கப்படும் என கூறினார்.