Top
undefined
Begin typing your search above and press return to search.

#BREAKING: மீண்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறதா? மருத்துவ குழுவின் யோசனை என்ன?

#BREAKING: மீண்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறதா? மருத்துவ குழுவின் யோசனை என்ன?

Vignesh KBy : Vignesh K

  |  29 Jun 2020 8:06 AM GMT

கொரோனா வைரஸ் பரிசோதனையை மேலும் அதிகரிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளோம். தற்போது சென்னையில் மட்டும் ஒரு தினத்துக்கு 10,000 கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இதனை 30,000 பரிசோதனை நடத்த வேண்டும் என பரிந்து வைத்துள்ளோம்.

திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் சென்ற ஒரு வாரமாக கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. சென்னை மாவட்டத்தில் பின்பற்றப்படும் தடுப்பு நடவடிக்கைகளை மற்ற மாவட்டங்களில் பின்பற்ற வேண்டும். சென்னையில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் காலம் குறைந்து விட்டது.

பொது முடக்கத்தை பற்றி மருத்துவ குழுவினர் பரிந்துரைக்கவில்லை. கொரோனா வைரஸ் பரவுவது அதிகமாக இருக்கும் பகுதிகளில் மட்டும் பொது முடக்கத்தை அதிகமாக்க வேண்டும். பொது போக்குவரத்து காரணத்தினால் சில மாவட்டங்களில் வைரஸ் அதிகமாக பரவி உள்ளது. பொதுப் போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என மருத்துவ குழு பரிந்துரைத்துள்ளது.

மேலும் பரிசோதனையை அதிகமாக செய்வதால் நோயாளிகளை கண்டுபிடிக்கப்பட்டு இறப்பு எண்ணிக்கையை குறைக்கலாம். தமிழ்நாட்டில் தான் இருப்பவர்கள் விகிதம் குறைவாக உள்ளது. ஊரடங்கு உத்தரவை நீடிப்பது பற்றியும் மற்றும் கட்டுப்பாடுகள் பற்றியும் தமிழக அரசு தான் முடிவு எடுக்கும் என தெரிவித்துள்ளனர்.

Next Story