Kathir News
Begin typing your search above and press return to search.

புதிதாக அரசுப் பணியிடங்களை உருவாக்கலாம் - தமிழக அரசு புதிய உத்தரவு!

புதிதாக அரசுப் பணியிடங்களை உருவாக்கலாம் - தமிழக அரசு புதிய உத்தரவு!

புதிதாக அரசுப் பணியிடங்களை உருவாக்கலாம் - தமிழக அரசு புதிய உத்தரவு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Oct 2020 4:28 PM GMT

தமிழகத்தில் புதிதாக அரசுப் பணியிடங்கள் உருவாக்குவதற்கு அரசு விதித்திருந்த தடையை தற்போது திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அனுமதி பெற்று புதிய பணி நியமனங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அதனை தொடர்ந்து அமல் படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு காரணமாக தமிழக அரசு நிதி நெருக்கடியை சமாளிக்கும் விதமாக புதிய பணியிடங்களை உருவாக்கக் கூடாது என்று செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி அரசாணை வெளியிட்டு இருந்தது. பதவி உயர்வு மற்றும் கருணை அடிப்படையில் அமர்த்தப்படும் பணியிடங்களுக்கு எந்தவித தடையும் இல்லை என்றும் அப்போது அறிவித்து இருந்தது.

இந்த முடிவில் தற்போது சில மாற்றங்களை கொண்டு வருவதாக தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் புதிய பணியிடங்களை தோற்றுவிப்பதற்கு முன்னர் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன் அனுமதி பெற்று தோற்றுவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கெனவே உள்ள பதவிகளுக்கு தேர்வுகள் நடைபெற்று பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்று நம்பப்படுகிறது.

இது அரசு பணி தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஆறு மாதங்களாக தேர்வு நடக்காமல் இருப்பதால் இந்த வருடம் அரசு தேர்வுகள் எதுவும் நணக்காதோ என்று மாணவர்கள் அச்சமடைந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் கூடிய விரைவில் மாணவர்கள் தயாராகிக் கொண்டிருக்கும் குரூப்-1 குரூப்-2 குரூப்-4 மற்றும் குரூப்-8 தேர்வுகள் விரைவில் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story