Kathir News
Begin typing your search above and press return to search.

சூரிய சக்தி மூலம் ஒளி வெள்ளத்தில் மிளிர போகும் இருளர் குடியிருப்பு.!

சூரிய சக்தி மூலம் ஒளி வெள்ளத்தில் மிளிர போகும் இருளர் குடியிருப்பு.!

சூரிய சக்தி மூலம் ஒளி வெள்ளத்தில் மிளிர போகும் இருளர் குடியிருப்பு.!

By : Shiva V

  |  9 Nov 2020 6:30 PM GMT


பொதுவாக தீபாவளி என்றாலே ஒளியேற்றும் திருநாள் தான் என்றாலும் இந்த வருடம்‌ செங்கியில் உள்ள அஞ்சனச்சேரி கிராமத்தைச் சேர்ந்த இருளர் சமூகத்தினரின் தீபாவளிக் கொண்டாட்டம் வெளிச்சம் மிக்கதாக ஆகப் போகிறது. பல ஆண்டு காலப் போராட்டத்துக்குப் பின் இந்த வருடம் இங்கு வசிக்கும் 14 குடும்பங்களுக்கு மின்சார வசதி கிடைத்துள்ளது.

இத்தனை வருடங்களாக எண்ணெய் விளக்குகளையே பயன்படுத்தி வந்த தங்களுக்கு இறுதியாக மின்சார வசதி கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக இருளர் சமூகத்தினர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளனர். 60 வயதான வள்ளி STEPS என்ற அமைப்பின் உதவியால் முதல் முறையாக மின்சார வசதியை அனுபவிக்கப் போகிறார். இந்த அமைப்பு சூரிய சக்தியைப் பயன்படுத்தி இந்த கிராமத்தில் மின்சார வசதி செய்து தருவதை ஒரு சோதனை முயற்சியாக மேற்கொண்டுள்ளது.

கடந்த ஆறு மாதங்களில் இந்த அமைப்பு 50 பழங்குடியின குடும்பங்களுக்கு சூரிய சக்தி மூலம் மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 19 வயதான மாதவன் கூறும் போது, "எனக்கு பார்வை இலாலை என்றாலும் எனது கிராமத்தினருக்கு மின்சார வசதி கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்" என்று கூறியுள்ளார்.
திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஜக்கம்பெட்டை இருளர் குடியிருப்பில் தொடங்கிய STEPS அமைப்பின் இந்த மகத்தான பணி தற்போது இந்த சமூகத்தினருக்கு முறையாக பட்டா வாங்கித் தருவது வரை நீண்டுள்ளது. இருளர் சமூகத்தினர் நெடுநாட்களாக தங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு சட்டரீதியாக அங்கீகாரம் அளித்து பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. பட்டா இல்லாமல் மின் இணைப்பு பெறுவது இயலாது என்பதால் சூரிய சக்தி மூலம் மின்சார வசதி அளிக்கும் முயற்சியை STEPS அமைப்பைச் சேர்ந்தவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
நன்றி -https://www.newindianexpress.com/good-news/2020/nov/08/this-deepavali-is-literally-a-festival-of-lights-for-irula-families-2220873.html
Next Story