Top
undefined
Begin typing your search above and press return to search.

முடி திருத்துவதை சாதியை வைத்து இழிவாகக் பேசிய தி.மு.க மூத்த எம்.எல்.ஏ பழனிவேல் தியாகராஜன் : சாதிவன்மத்தோடு பேசுவது எல்லாம் என்ன நியாயம்?

முடி திருத்துவதை சாதியை வைத்து இழிவாகக் பேசிய தி.மு.க மூத்த எம்.எல்.ஏ பழனிவேல் தியாகராஜன் : சாதிவன்மத்தோடு பேசுவது எல்லாம் என்ன நியாயம்?

MuruganandhamBy : Muruganandham

  |  21 May 2020 1:18 PM GMT

ஒரு பொதுநிகழ்ச்சியில், முடி திருத்துவதை "அம்பட்டையன் கடை" என்று சாதியை வைத்து இழிவாகக் பேசியுள்ளார் திமுகவின் மூத்த அரசியல்வாதி எம்.எல்.ஏ பழனிவேல் தியாகராஜன்.

முடி திருத்தம் செய்யும் சமூக மக்களை அவமதிக்கும் வகையில் திமுகவின் மூத்த எம்எல்ஏ பழனிவேல் தியாகராஜன் பேசியிருப்பது குறிப்பிட்ட சமூக மக்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் தொலைக்காட்சி சேனலின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இவர், முடி திருத்துவதை "அம்பட்டையன் கடை" என்று சாதியை வைத்து இழிவாகக் பேசியுள்ளார். இவரது இந்தப் பேச்சை பல்வேறு தரப்பினர் கண்டித்து வருகின்றனர்.

அடுத்தடுத்து தங்கள் கட்சியினர் குறிப்பிட்ட சமூக மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக பேசி வருவது திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்து தங்களின் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இப்படி பேசி வரும் நிலையில், அவர்களின் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், பட்டியலின மக்களின் ஆதரவை இழக்க வேண்டி வரும். அப்படி இல்லையெனில், கட்சியின் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்தால், கட்சியில் பிளவு ஏற்பட்டும் விடும். இந்த நெருக்கடி இருப்பதால்தான் ஸ்டாலின் அமைதி காத்து வருகிறார்.

சமூகநீதி சமத்துவம் என வெளியே வேடம் போடும் திமுகவினர் தொடர்ந்து இப்படி சாதிவன்மத்தோடு பேசுவது எல்லாம் என்ன நியாயம்? என்று சமூக வலைதளங்களில் மக்கள் குமுறி வருகின்றனர்.


Next Story