Begin typing your search above and press return to search.
நிவர் புயல் எதிரொலி.. சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை.!
நிவர் புயல் எதிரொலி.. சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை.!

By :
நிவர் புயல் எதிரொலி காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னை சைதாப்பேட்டை, கிண்டி, நந்தனம், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
ஆலந்தூர், அனகாபுத்தூர், கோட்டூர்புரம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அசோக் நகர், கோடம்பாக்கம், குரோம்பேட்டை, மேற்கு மாம்பலம், எழும்பூர் ஆகிய பகுதிகளிலும் கனமழை தொடர்ந்து பெய்கிறது.
வங்கக்கடலில் உருவான நிவர் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறியது. இது புயலாக மாறி நாளை மாமல்லபுரம், காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
Next Story