"பாகிஸ்தானுடன் கள்ள உறவா?" கொந்தளித்த பா.ஜ.க SG சூர்யா - வீடியோவை நீக்கிய உதயநிதி ஸ்டாலின்!
"பாகிஸ்தானுடன் கள்ள உறவா?" கொந்தளித்த பா.ஜ.க SG சூர்யா - வீடியோவை நீக்கிய உதயநிதி ஸ்டாலின்!

சில நாட்களுக்கு முன்பு தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ வீடியோ ஒன்று உதயநிதி ஸ்டாலினின் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் பகிரப்பட்டது. தூத்துக்குடியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த வீடியோ ஆளும் அ.தி.மு.க-வை கடுமையாக விமர்சித்து தயாரிக்கப்பட்டு இருந்தது.
இந்த வீடியோவில் ஒரு இடத்தில் இந்திய வரைபடம் இடம்பெறுகிறது. அந்த இந்திய வரைபடத்தில் காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் வரைபடத்துடன் இணைக்கப்பட்டு இருந்தது. இதைக்கண்ட நெட்டிசன்கள் கடும் கோபமடைந்தனர்.
பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் SG சூர்யா "தி.மு.க-விற்கும், பாகிஸ்தானுக்கும் கள்ள உறவா? எதனால் இந்தியப் பகுதிகள் மற்ற நாட்டின் பகுதிகளாக காட்டப்பட்டுள்ளது?" என்ற கேள்வியை எழுப்பினார். இது குறித்து ரிபப்ளிக் தொலைகாட்சி செய்தி வெளியிட்டு இருந்தது.
#DMK's official video released yesterday doesn't show PoK & CoK as part of #India. Is this the official stand of @arivalayam? DMK President @MKStalin & his anointed DMK heir @UdhayStalin should clarify if they have any private #Pakistan deal(?) to take such a stand against India! pic.twitter.com/oCE9M9bmS6
— SG Suryah (@SuryahSG) November 12, 2020
இதையடுத்து தற்போது தொடர்ந்து கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக தற்போது உதயநிதி ஸ்டாலின், இந்திய வரைபடத்தை தவறாக சித்தரித்த வீடியோ நீக்கப்பட்டதாக SG சூர்யா தெரிவித்துள்ளார். அதற்கான ஆதாரத்தையும் தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளார்.
நம் தொடர் எதிர்ப்புக்கு பிறகு காஷ்மீர், லடாக் பகுதிகளை பாகிஸ்தான், சீன பகுதிகளாக சித்தரித்த தி.மு.க அதிகாரப்பூர்வ வீடியோ #Facebook மற்றும் #Twitter பக்கங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
— SG Suryah (@SuryahSG) November 14, 2020
இது நமக்கு கிடைத்த வெற்றி.
FB:https://t.co/UFvjoWz9Ry
Twitter:https://t.co/MYmWMUjc16 pic.twitter.com/1Edsg2cZgA