Kathir News
Begin typing your search above and press return to search.

காசிமேட்டில் கடலில் மூழ்கி நான்கு மீனவசிறுவர்கள் பரிதாப சாவு : பாஜக தலைவர் முருகன் அறிக்கை.!

காசிமேட்டில் கடலில் மூழ்கி நான்கு மீனவசிறுவர்கள் பரிதாப சாவு : பாஜக தலைவர் முருகன் அறிக்கை.!

காசிமேட்டில் கடலில் மூழ்கி நான்கு மீனவசிறுவர்கள் பரிதாப சாவு : பாஜக தலைவர் முருகன் அறிக்கை.!

Rama SubbaiahBy : Rama Subbaiah

  |  17 Nov 2020 8:39 AM GMT

சென்னை காசிமேடு பகுதியில் கடலில் குளித்து விளையாடியபோது கடல் அலையில் சிக்கி 4 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

புயல், மழைக் காலங்களில் கடலில் குளிப்பதை காவல்துறையினர் தடை செய்யவேண்டும். கடலில் குளிப்பதைத் தடுக்க தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையே இந்த துயரச் சம்பவம் உணர்த்துகிறது.

கடலோரத்தில் வசிப்பவர்களுக்கு குறிப்பாக மீனவ சகோதரர்களுக்கு கடல் பழக்கமானது என்றாலும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குழந்தைகள் செல்லாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும்.இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்க வேண்டும். உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு முருகன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News