Kathir News
Begin typing your search above and press return to search.

ஜூன் மாதம்தான் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு.. தேர்வுத்துறை தகவல்.!

ஜூன் மாதம்தான் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு.. தேர்வுத்துறை தகவல்.!

ஜூன் மாதம்தான் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு.. தேர்வுத்துறை தகவல்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Nov 2020 5:16 PM GMT

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கல்வி நிலையங்கள் முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் மாணவர்கள் யாரும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லாமல் வீட்டிலேயே உள்ளனர்.

ஒரு சில கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக பாடத்தை நடத்தி வருகின்றது. அப்படி நடத்துவதால் தற்போது வரைக்கும் தேர்வுகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதற்கிடையில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பொதுத்தேர்வுகள் துறை இன்று தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அநேகமாக பொதுத்தேர்வுகள் 10 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் மாதம் நடைபெறும் எனவும், அதாவது தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடந்த பிறகுதான் நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News