Kathir News
Begin typing your search above and press return to search.

ராமநாதபுரத்தில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம்.. வனத்துறைக்கு தகவல் அளித்த மீனவர்கள்.!

ராமநாதபுரத்தில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம்.. வனத்துறைக்கு தகவல் அளித்த மீனவர்கள்.!

ராமநாதபுரத்தில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம்.. வனத்துறைக்கு தகவல் அளித்த மீனவர்கள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Nov 2020 5:00 PM GMT

ராமநாதபுரம் அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 3 டன் எடையுள்ள ராட்சத திமிங்கலத்தை வனத்துறை அதிகாரிகள் மீட்டு, கடற்கரையிலே புதைத்தனர்.
ராமநாதபுரம் அடுத்த ஆற்றங்கரை கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள், அங்கு ராட்சத திமிங்கலம் ஒன்று இறந்த கிடப்பதை பார்த்தனர்.


இதனையடுத்து, மீனவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனசரகர் சதீஷ் தலைமையில் அங்கு வந்த வனத்துறையினர், இறந்த திமிங்கலத்துக்கு பிரேத பரிசோதனை நடத்தினர். பின்னர் அதே இடத்தில் ஜேசிபி எந்திர உதவியுடன் குழிதோண்டி திமிங்கலத்தை புதைத்தனர்.

இது குறித்து பேசிய வனசரகர் சதீஷ் பேசியதாவது: உயிரிழந்த திமிங்கலம் சுமார் 3 டன் எடையும், 9 மீட்டர் நீளமும் உடையது என தெரிவித்தார். மேலும், திமிங்கலம் இறப்புக்கான காரணம் குறித்து சரிவர தெரியவில்லை என கூறிய அவர், ராமநாதபுரம் வனச்சரகத்தில் காலநிலை மாற்றத்தால் தொடர்ந்து திமிங்கலங்களும், அரிய வகை மீன்களும் உயிரிழந்து வருவது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார்.


இறந்து கிடந்த திமிங்கலத்தை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் குவியத் தொடங்கினர். போலீசார் அவர்கள் அனைவரையும் கலைந்து செல்லும்படி கூறினர். இதனையடுத்து அவர்கள் அப்பகுதியை விட்டு நகர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News