Top
Kathir News
Begin typing your search above and press return to search.

மீண்டும் தமிழுக்கு முக்கியத்துவம் - இனி விமான நிலையங்களில் முதல் அறிவிப்பு தமிழில்.!

மீண்டும் தமிழுக்கு முக்கியத்துவம் - இனி விமான நிலையங்களில் முதல் அறிவிப்பு தமிழில்.!

மீண்டும் தமிழுக்கு முக்கியத்துவம் - இனி விமான நிலையங்களில் முதல் அறிவிப்பு தமிழில்.!

By : Rama Subbaiah

  |  7 Nov 2020 9:53 AM GMT

தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும், விமானங்களிலும் ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் மட்டுமே ஏற்கனவே அறிவிப்பு செய்யப்பட்டது. இந்த நிலையில் பல்வேறு தரப்பிலிருந்தும் வந்த கோரிக்கைகளை அடுத்து மத்திய அரசு மேற்கண்ட இரு அறிவிப்புகளுடன் தமிழ் மொழியிலும் அறிவிப்பு வெளியிட உத்தரவிட்டது. இதற்கான உத்தரவு சென்ற 2018 ஆம் ஆண்டு Dec 25 ந்தேதியன்று நரேந்திர மோடி அரசு உத்தரவிட்டது. இதன்படி இப்போது முதலில் ஆங்கிலம், இரண்டாவதாக ஹிந்தி, மூன்றாவதாக தமிழில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகம் வந்து செல்லும் அனைத்து விமானங்களிலும் தமிழில் வெளியிடும் அறிவிப்பு முதலில் வரவேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றிருந்த தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மற்றும் செயலாளரை சந்தித்து பேசினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் இருந்து புறப்படும் விமானங்களிலும், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் விமானங்களிலும் முதல் அறிவிப்பு தமிழில் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தியதாக கூறினார்.

இதை மத்திய அமைச்சர் ஏற்றுக் கொண்டதாகவும் இதை அடுத்து சென்னையில் தரையிறங்கும் அனைத்து விமானக்ளில் முதல் அறிவிப்பு தமிழ் மொழியில் வரும் என்றும் இந்த அறிவிப்பு பொங்கலுக்குள் இடம்பெறும் என கூறிய அமைச்சர், அலுவல் மொழி சட்டத்திலும் தமிழ் இடம்பெற கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறினார்.

இந்த நிலையில் தமிழக அமைச்சரை சந்தித்தது தொடர்பான புகைப்படங்களை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தனது டிவிட்டரில் பதிவிட்டு, அனைத்து விமானங்களிலும் தமிழில் அறிவிப்புகள் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விமான நிறுவனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரின் இந்த உடனடி நடவடிக்கைக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் கூறுகையில் தமிழுக்காக மார்தட்டும் திமுக, ஐக்கிய முன்னணி ஆட்சியில் டெல்லியில் 10 ஆண்டுகளாக பல உயர் பொறுப்புகளில் இருந்தபோதும் இந்த விவகாரத்தை கண்டு கொள்ளவே இல்லை . ஆனால் குறைகள் சுட்டிக் காட்டப்பட்டதும் நரேந்திர மோடி அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துவருகிறது, ஏற்கனவே ஆங்கிலம் ஹிந்தியுடன் தமிழில் அறிவிப்புகளை செய்யவும் மோடி அரசுதான் உத்தரவிட்டது, இப்போது தமிழில் முதலில் அறிவிப்பு செய்யவும் மோடி அரசுதான் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அவர்கள் மேலும் கூறினார்.
Next Story