Kathir News
Begin typing your search above and press return to search.

"தமிழக அரசு என்னை பழிவாங்குகிறதா?" - அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா.!

"தமிழக அரசு என்னை பழிவாங்குகிறதா?" - அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா.!

தமிழக அரசு என்னை பழிவாங்குகிறதா? - அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Nov 2020 7:04 PM GMT

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு பைசா முறைகேட்டில் கூட நான் ஈடுபடவில்லை. என் மீதான புகார் அனைத்தும் எனக்கே ஆச்சரியமாக உள்ளது.

ஐஐடியில் பணியாற்றி வந்த எனது மகளை இங்கு பணியில் அமர்த்தியது நன்மைக்காகவே. ஆளுநர் உள்ளிட்ட யாரையும் நான் தற்போது வரை சந்தித்து பேசவில்லை. என் மகளின் வேலை அண்ணா பல்லைக்கு தேவைப்பட்டது.

பெயர் இல்லாமல் என சில மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளது. பணி மாறுதல் வேண்டும் என்றும், இல்லையென்றால் விளைவுகள் வேறு மாதிரியாக இருக்கும் என்று சிலர் மிரட்டி வருகின்றனர்.

எனது பதவிக்காலத்தில் உச்சபட்ச நேர்மையை கடைபிடித்து வருகிறேன். தமிழக அரசு என் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கிறதா? என்பதை கல்வியாளர்கள் தெரிவிக்க வேண்டும். மக்கள் என்ன நினைத்தாலும், மக்கள் என்ன செய்தாலும், எனக்கு கவலை இல்லை.

நான் நல்லவன் என்பதை யாருக்கும் உணர்த்த வேண்டாம். அது எனக்கு தெரியும். அரசு எந்த விசாரணைக்குழு அமைத்தாலும் எனக்கு எந்தவிதமான கவலையும் இல்லை. எல்லாமே மக்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story