‘நிவர்’ புயல்.. பாம்பனில் ஏற்றப்பட்ட புயல் எச்சரிக்கை கூண்டு.!
‘நிவர்’ புயல்.. பாம்பனில் ஏற்றப்பட்ட புயல் எச்சரிக்கை கூண்டு.!

தமிழகத்தை நெருங்கி வரும் நிவர் புயலை முன்னிட்டு அரசு நிர்வாகம் முழு அளவில் செயல்பட்டு வருகிறது. இந்த புயல் காரணமாக பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதை அடுத்து, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனிடையே, காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பாம்பன் வடக்கு கடல் பகுதியில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது.
இதனால், அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள், தென்கடல் பகுதியில் உள்ள சின்னப் பாலம், தெற்குவாடி கடற்கரை பகுதிக்கு கொண்டு சென்று பாதுகாக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கடலுக்கு சென்றவர்கள் மீண்டும் கரைக்கு திரும்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. புயல் ஏற்படும்போது மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.