ஓசூரில் தமிழ்நாடு இந்து மகாசபா மாநில செயலாளர் வெட்டிபடுகொலை.. மர்ம நபர்கள் கைவரிசை.!
ஓசூரில் தமிழ்நாடு இந்து மகாசபா மாநில செயலாளர் வெட்டிபடுகொலை.. மர்ம நபர்கள் கைவரிசை.!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தமிழ்நாடு இந்து மகாசபா மாநில செயலாளர் நாகராஜ் என்பவரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி, அடுத்துள்ள ஓசூர் அனுமந்த நகரில் வசித்து வருபவர் நாகராஜ் என்கின்ற வில்லங்கம் நாகராஜ், 45, இவர் தமிழ்நாடு இந்து மகாசபா மாநில செயலாளராக பதவி வகித்து வருகின்றார். மேலும், வில்லங்கம் பத்திரிகையில் நிருபராகவும் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை 8.30 மணியளவில் தனது வீட்டு அருகே நடைபயிற்சி செய்துள்ளார். அப்போது திடீரென்று வந்த மர்ம நபர்கள் நாகராஜை சராமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளது. இதில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த ஓசூர் டவுன் டிஎஸ்பி முரளி சம்பவ இடத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தி வருகின்றார். மேலும், தப்பியோடிய கொலையாளிகளை பிடிக்க தீவிர முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்து பிரமுகர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஓசூர் முழுவதும் காட்டுத்தீ போன்று பரவியுள்ளது. பல முக்கிய இந்து பிரமுகர்கள் நாகராஜ் வீட்டுக்கு செல்லத் துவங்கியுள்ளனர். மேலும், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.