தமிழ்நாடு: இறுதி செமெஸ்டர் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு எழுத அனுமதி.!
தமிழ்நாடு: இறுதி செமெஸ்டர் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு எழுத அனுமதி.!

கொரோனா தொற்றுநோய் காரணமாகத் தமிழகத்தில் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, இறுதியாண்டு மாணவர்களுக்கும் மற்றும் தேர்வு இணையம் மூலம் நடைபெற்றது. இதில் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த அனுமதியளித்துத் தேர்வுக்கான தேதிகளைச் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மேலும் பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் ஆகஸ்ட் 12 தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்கிடையில் இளங்கலை மற்றும் முதுகலை பயலும் மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வு செப்டம்பர் 22 இல் தொடங்கி 29 வரை இணையம் மூலம் நடைபெற்று முடிந்தது.
இந்த தேர்வில் சில மாணவர்கள் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாகவும் மற்றும் வேறு சில காரணங்களாலும் தேர்வில் பங்குபெற இயலாமல் போனது. இதனைத் தொடர்ந்து தற்போது அந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த அனுமதியளித்து அறிக்கையை வெளியிட்டுள்ளது.
"தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாகத் தேர்வு எழுத முடியாமல் போன பல்கலைக்கழகத்தின் அனைத்து துறை மாணவர்களுக்கும் மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் மறுதேர்வு நடத்த அனுமதியளிக்கப்படுகின்றது. முதுகலை மற்றும் இளங்கலை படிப்புகளைப் பயலும் மாணவர்களுக்கு நவம்பர் 17 முதல் 21 ஆம் தேதி வரை இணையம் மூலம் தேர்வினை நடத்தத் திட்டமிட்ட பட்டுள்ளது," என்று அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.