Kathir News
Begin typing your search above and press return to search.

ஓட்டல் சாம்பாரில் இறந்து கிடந்த எலிகுஞ்சு.. கோவையில் பயங்கரம்.!

ஓட்டல் சாம்பாரில் இறந்து கிடந்த எலிகுஞ்சு.. கோவையில் பயங்கரம்.!

ஓட்டல் சாம்பாரில் இறந்து கிடந்த எலிகுஞ்சு.. கோவையில் பயங்கரம்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Nov 2020 4:43 PM GMT

கோவை அரசு மருத்துவமனைக்கு எதிரில் உள்ள ஓட்டலில் வாங்கிய சாம்பாரில் எலிகுஞ்சு இறந்து கிடந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தார். இது பற்றி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை அரசு மருத்துவமனையில் உடுமலைப்பேட்டையை சேர்த்த திவ்யா என்பவரின் சகோதரர் கார்த்திகேயன் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றார்.


இந்நிலையில், இன்று காலை திவ்யா கோவை அரசு மருத்துவமனைக்கு எதிரில் உள்ள டேஸ்டி என்ற உணவகத்தில் அவருக்கும், தம்பிக்கும் ஆப்பம் மற்றும் சாம்பார் ஆகியவற்றை வாங்கி சென்றதாக தெரிகிறது.

உடல் நலக்குறைவால் இருந்த தனது தம்பிக்கு அதை சாப்பிட கொடுத்துள்ளார். சாப்பிட்ட பின்னர் மீதி இருந்த சாம்பாரில் பார்த்த போது அதில் எலிக்குஞ்சு ஒன்று இறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தவர், உடனடியாக சாம்பாருடன் ஹோட்டல் உரிமையாளரிடம் வந்து முறையிட்ட போது, சரியான பதில் அளிக்காமல் அந்த பொட்டலத்தை வாங்கி வைத்து கொண்டதாக தெரிகிறது.

இதனையடுத்து ஓட்டல் உரிமையாளரிடம் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் சாம்பாரில் எலி கிடந்தது குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடையில் சோதனை மேற்கொண்டனர். சாம்பாரில் எலி கிடந்தது சம்பவம் பற்றி உரிய விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News