Top
Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்திற்கு உள்துறை அமைச்சர் இந்த காரணத்திற்காகத்தான் வருகிறாரா?

தமிழகத்திற்கு உள்துறை அமைச்சர் இந்த காரணத்திற்காகத்தான் வருகிறாரா?

தமிழகத்திற்கு உள்துறை அமைச்சர் இந்த காரணத்திற்காகத்தான் வருகிறாரா?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Nov 2020 9:00 AM GMT

சென்னையில் நவம்பர் 21ம் தேதி ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டவுள்ளார். அதில் ரூ.61,843 கோடியிலான சென்னை மெட்ரோ ரயில் திட்ட 2ம் கட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், திருவள்ளூர் தேர்வாய்கண்டிகையில் ரூ.400 கோடியில் அமைத்த புதிய நீர்தேக்கத்தை அர்பணிக்கின்றார்.

பல்வேறு உட்கட்டமைப்பு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டவுள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சை புகலூரில் ரூ.406 கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டம், கோவை, அவிநாசி சாலையில், ரூ.1,620 கோடியில் உயர்மட்ட சாலைத்திட்டம், காமராஜர் துறைமுகத்தில் ரூ.900 கோடியில் இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோலிய முனையத்திற்கும் அடிக்கல் நாட்டிகிறார் அமைச்சர்.

இந்த நிகழ்ச்சிகளில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Next Story