சென்னை: TNPSC ஊழல் தொடர்பாக மேலும் 26 பேர் கைது.!
சென்னை: TNPSC ஊழல் தொடர்பாக மேலும் 26 பேர் கைது.!

இந்த ஆண்டு தொடக்கத்தில், அரசாங்க பணிகளுக்காக நடத்தப்படும் TNPSC தேர்வுகளில் நடந்த ஊழல்கள் குறித்து CB-CID கண்டுபிடித்தனர். அது தொடர்பாக மேலும் சென்னையை சேர்ந்த 26 பேரை CB-CID காவல் துறை கடந்த வாரம் கைது செய்துள்ளது. இந்த ஊழல் தொடர்பான கைது எண்ணிக்கையானது தற்போது 97 ஆக உயர்ந்துள்ளது.
இந்த மாதம் தொடக்கத்தில் 20 பேரை ஊழல் தொடர்பாக கைது செய்தனர். பின்னர் கொரோனா தொற்றுநோய் காரணமாக அவர்கள் ஒரு மாதத்திற்கு பிறகு விடுவிப்பதற்கான வழிமுறைகளை காவல்துறையினர் கடைபிடித்தனர், அதன் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஊழலில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவர்கள் 2016, 2017, 2018 இல் நடந்த TNPSC தேர்வுகளில் பங்குபெற்று பணிகளை பெற்றுள்ளனர் என்று CB-CID தெரிவித்துள்ளது. இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்கள் பணிபுரிந்த துறைகளுக்கு CB-CID கடிதம் ஒன்றை அனுப்பிவைத்தது. அதில் குற்றம்சாட்டவர்கள் TNPSC யில் நடைபெற்ற ஊழலில் பங்குபெற்றது தொடர்பாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர். வரவிருக்கும் வாரங்களில் மேலும் சிலர் கைது செய்யப்பட உள்ளனர் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
CB-CID காவல்த்துறை மூன்று கட்ட தேர்வுகளில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரணை நடத்துகின்றது. 2019 இல் நடைபெற்ற குரூப் 4 தேர்வு, 2017 இல் நடைபெற்ற குரூப் 2A தேர்வு மற்றும் 2016 இல் நடைபெற்ற VAO தேர்வுகளிலும் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரித்து வருகின்றது.
இடைத்தரகர்கள் மூலம் தேர்வுகளில் பங்குபெற்றவர்கள் காற்றில் மறைய கூடிய இன்க்கை பயன்படுத்தியுள்ளனர். இதன் மூலம் பின்னர் விடைத்தாள்களில் இடைத்தரகர்கள் மாற்றி எழுதியுள்ளனர். ஜனவரி 24 இல் CB-CID இது குறித்து வழக்கு பதிவு செய்தது, பின்னர் இது குறித்து அதிகாரப்பூர்வமாக விசாரணையை தொடங்கியது. 2019 இல் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் ராமநாதபுரத்தை சேர்ந்த இரண்டு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் மட்டும் அதிக மதிப்பெண்கள் பெற்றதால் இந்த ஊழல்கள் வெளிவந்தது.