"அமித்ஷா'வ பார்த்து என்ன எங்களுக்கு பயமா?" என பயத்திலேயே உளறிய காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.!
"அமித்ஷா'வ பார்த்து என்ன எங்களுக்கு பயமா?" என பயத்திலேயே உளறிய காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.!
By : Mohan Raj
வரும் 21'ம் தேதி தமிழகம் வரும் அமித்ஷாவின் பயண திட்டம் விளைவாக எதிர்கட்சிகள் இப்பொழுதே புலம்ப துவங்கிவிட்டன. அதிலும் குறிப்பாக காங்கிரஸ், தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்றவைகள் பயத்தில் உளர துவங்கிவிட்டன. அந்த வகையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அமித்ஷா வருகையை ஒட்டி உச்சகட்ட பயத்தில் வார்த்தைகளை உளறியுள்ளார்.
அதில் அவர் பேசியதாவது, "அமீத்ஷா என்ன தீவிரவாதியா எதிர்கட்சிகளுக்கு பயத்தை ஏற்படுத்த. கையில் என்ன ஏ.கே.47வுடன் வருவாரா. ஜனநாயக நாட்டில் யாரை பார்த்தும் யாரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. தமிழ் மண்ணில் அமீத்ஷாவை பார்த்து யாரும் பயப்பட மாட்டார்கள். முருகன் கற்பனையில் வாழ்கிறார். நிஜ உலகிற்கு வர சொல்ல வேண்டும். பீகார் மாநிலத்தில் வெற்றி பெற்றவர்களுக்கும் வெற்றி பெறாதவர்களுக்கும் உள்ள வாக்கு வித்தியாசம் 12700 தான்.
இந்தியாவில் இவ்வளவு குறைவான வாக்கு வித்தியாசத்தில் ஒரு ஆட்சி அமைந்தது கிடையாது. யாரும் இந்த வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்ததும் கிடையாது. கூட்டணியில் எந்த கட்சி அதிகமாக பெற்று இருக்கிறது. குறைவாக பெற்று இருக்கிறது என்று பார்ப்பதில்லை. கூட்டணியில் எவ்வளவு இடங்களை பெற்று இருக்கிறோம் என்பதை தான் பார்க்க வேண்டும். பீகாரில் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பீகார் மந்திரிகள் போட்டியிட்ட இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. பீகார் மந்திரிகள் அதிக செலவு செய்தனர். அதற்கு காங்கிரஸ் கட்சியால் ஈடு கொடுக்க முடியவில்லை.
காங்கிரஸ் கட்சியில் பணம் இல்லை. பீகார் மாநிலத்தை வைத்து மற்றொரு மாநிலத்திலும் அப்படி நடக்கும் என்று சொல்ல முடியாது. தமிழகத்தில் 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 10 இடங்களை பெற்று 9 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதை தான் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும். பாட்டிக்காலத்தில் என்ன நடந்தது என்பதை கணக்கில் எடுத்தால் எப்படி சரியாக இருக்கும். காங்கிரஸ் கட்சி உள்ள கூட்டணி வெற்றி பெற கூடிய கூட்டணி. மோடியை வெல்ல முடியாது என்றவர்களுக்கு பீகார் தேர்தல் சரியான படிப்பினை. மோடியை வீழ்த்த முடியும் என்பதை பீகார் தேர்தல் நிரூபித்து உள்ளது" என முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.
அதாவது பீகாரில் காங்கிரஸ் தான் வெற்றி பெற்றது என்ற அவர் இரண்டு நிமிடம் கழித்து பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு நிறைய காரணங்கள் உள்ளது என்றார்.
2019'ல் தமிழகத்தில் காங்கிரஸ் பெற்ற வெற்றியை பற்றி பேசவும் என்றார் பின் அடுத்த வரியில் பழைய கதையை பேச கூடாது என்றார், இப்படி ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவரை அமித்ஷா'வின் வருகை புலம்ப வைத்துவிட்டது.