Top
undefined
Begin typing your search above and press return to search.

கிட்னி வாங்கி தருவதாக இணையத்தில் விளம்பரம் செய்து பண மோசடி ! வெளிநாட்டவர்கள் உள்பட 6 பேர் கைது

கிட்னி வாங்கி தருவதாக இணையத்தில் விளம்பரம் செய்து பண மோசடி ! வெளிநாட்டவர்கள் உள்பட 6 பேர் கைதுPicture Courtesy : Vijayavani

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  15 Feb 2020 2:45 PM GMT

சிறுநீரக மோசடியில் 200- க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றியதாகக் கூறப்படும் மூன்று வெளிநாட்டினர் உட்பட 6 பேரை பெங்களூரு பானஸ்வாடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

முதலில் சிறுநீரகங்களை வாங்கவும் விற்கவும் அவர்கள் உறுதியளிப்பார்கள். பிறகு இந்த செயல்முறையைத் தொடங்க, ஆரம்ப டோக்கன் தொகையை செலுத்திய பின்னர் தகவல் தொடர்புகளை துண்டித்துவிடுவார்கள். இந்த கும்பலுக்கென்று ஒரு வலைத்தளம் இருந்தது. அந்த வலைதளத்தில் தங்களுக்கு W.H.O - வின் அங்கீகாரம் இருப்பதாகக் கூறிக்கொண்டு, பெங்களூரு ஹெச்.ஆர்.பி.ஆர் லேஅவுட்டில் உள்ள ஒரு சூப்பர்-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் பெயரையும், மக்களை கவர்ந்திழுக்க புகழ்பெற்ற மருத்துவர்களையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர் என்று செய்தி குறிப்புகள் கூறுகின்றன.

"அவர்கள் இதுவரை சுமார் 200 பேரிடம் தலா ₹50,000 முதல் ₹60,000 வரை வாங்கி ஏமாற்றியதாக தெரியவந்துள்ளது", என்று காவல்துறை தெரிவிக்கிறது.

பெங்களூரு ஹெக்டே நகரில் தங்கியிருக்கும் 29 வயது நைஜீரிய எசீன் லவ்லி தான் மூளையாக செயல்பட்டுள்ளார். பாபுசபால்யாவைச் சேர்ந்த முஹம்மது அகமது இஸ்மாயில் (24), கம்மனஹள்ளியைச் சேர்ந்த மார்வன் எஃப் (27) (இருவரும் சூடானைச் சேர்ந்தவர்கள்) அவரது உதவியாளர்கள். திரிபுராவைச் சேர்ந்த மூன்று ஆண்கள் - பன்னேர்கட்டாவைச் சேர்ந்த ஹேரேந்திர திரிபுரா, கிமி ரஞ்சன் திரிபுரா, மற்றும் பொம்மனஹள்ளியைச் சேர்ந்த ஜடின் குமார் திரிபுரா, ஆகியவர்கள் தேவைப்படும் பணத்தொகையை ஏற்பாடு செய்துள்ளனர்.

பானஸ்வாடியில் உள்ள ஸ்பெஷலிஸ்ட் மருத்துவமனையின் இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் ஷபிக் ஏ.எம்., இந்த கும்பல் குறித்து சில நாட்களுக்கு முன்பு காவல்துறையிடம் புகார் செய்தார். சிறுநீரகங்களை வாங்கி விற்பதற்காக ஒரு விளம்பரத்தை வெளியிட்டு பொதுமக்களை ஏமாற்றுவதற்காக தங்கள் மருத்துவமனை மற்றும் மருத்துவர்களின் பெயர்களை துஷ்பிரயோகம் செய்ததாக ஷபிக் குற்றம் சாட்டினார். பானஸ்வாடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். புகாரை விசாரிக்க போலீஸ் துணை ஆணையர் (கிழக்கு) எஸ்.டி.சரனப்பா ஒரு குழுவை அமைத்து விசாரணை செய்ததில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Inputs from Times of India and The Hindu

Next Story