Top
undefined
Begin typing your search above and press return to search.

டெல்லி வடகிழக்கு பகுதியில் 13 வயது இஸ்லாமியப் பெண்ணை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது என பொய்யான செய்தியை பரப்பும் பாகிஸ்தான் ஊடகம்!

டெல்லி வடகிழக்கு பகுதியில் 13 வயது இஸ்லாமியப் பெண்ணை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது என பொய்யான செய்தியை பரப்பும் பாகிஸ்தான்  ஊடகம்!

Praveen KumarBy : Praveen Kumar

  |  6 March 2020 7:23 AM GMT

பாகிஸ்தானைச் சேர்ந்த ரிபப்ளிக் என்ற சமூக ஊடகம் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி டெல்லியில் வடகிழக்குப் பகுதியில் 13 வயது முஸ்லிம் பெண்ணை 7 பேர் கொண்ட ஹிந்து கும்பல் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்தது வீதியில் தூக்கி எறிந்து இருக்கிறார்கள் என்ற செய்தி வெளியிட்டது, அத்துடன் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தது.

இந்த செய்தி சமூக ஊடகங்களில் பெரும் வைரலானது, இந்த செய்தியை ஹைதராபாத்தை சேர்ந்த எம் ஐ எம் கட்சியை சேர்ந்த பிரமுகர் ஜூபர் மேமன், மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த அரசியல் கட்சியான எம்.பி.டி, அம்ஜெட் உல்லா கானும் தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த செய்தியைப் பகிர்ந்துள்ளார்,மேலும் இந்த செய்தி பெரும் விவாதப் பொருளாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

மேலும் இது குறித்து அந்தப் பகுதியில் விசாரித்தபோது அப்படி ஏதும் சம்பவம் இங்கு நடக்கவில்லை என எஸ் ஹெச் ஓ சத்ய தேவி தெரிவித்தார், மேலும் அந்த ஊடகத்திலிருந்து வந்த செய்தி முற்றிலும் தவறானது அந்த புகைப்படமானது 2018 ஆம் ஆண்டு 'வி ஆர் ஆல் கேர்ள்ஸ்' என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது என கண்டுபிடிக்கப்பட்டது.

Next Story