நவி மும்பை - வைரஸ் பரிசோதனைக்காக அனுமதிக்கபட்டிருந்த 11 பேர் மருத்துவமனையிலிருந்து தப்பியோட்டம்
நவி மும்பை - வைரஸ் பரிசோதனைக்காக அனுமதிக்கபட்டிருந்த 11 பேர் மருத்துவமனையிலிருந்து தப்பியோட்டம்;

மஹாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் அண்மையில் துபாயிலிருந்து திரும்பிய 11 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அங்கு அவர்களுடைய ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது. இந்நிலையில் யாரிடமும் தெரிவிக்காமல் 11 பேரும் மருத்துவமனையிலிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நவி மும்பை மாநகராட்சி ஊழியர்களும், போலீசாரும் தப்பிச்சென்ற 11 பேரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தப்பிச்சென்ற 11 பேரில் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருந்தாலும் அது அனைவரையும் பாதிக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.