சிகாகோவில் இருந்த இந்தியர்கள் தாயகம் திரும்ப உதவிய ஏ.பி.வி.பி அமைப்பு!

சிகாகோவில் இருந்த இந்தியர்கள் தாயகம் திரும்ப உதவிய ஏ.பி.வி.பி அமைப்பு!

Update: 2020-04-05 02:51 GMT

கொரோனா பாதிப்புக்குள்ளான பல நாடுகளில் இருக்கும் இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. அந்த வகையில் சிகாகோவில் உள்ள இந்தியர்களை மீட்டு தாய்நாடு திரும்ப வழிவகை செய்துள்ளது, ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யா பரிஷத் (ஏ.பி.வி.பி).

ஏ.பி.வி.பி-யின் அகில இந்திய அமைப்பு செயலாளரான திரு.குந்தா லக்ஷ்மன், வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் பேசி சிகாகோவில் உள்ள இந்தியர்களை மீட்டு தாயகம் திரும்ப வழிவகை செய்துள்ளார்.

இது குறித்து மேனகா என்ற மாணவி கூறுகையில், "நான் சிகாகோவில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். என்னிடம் அமெரிக்கா பாஸ்போர்ட் உள்ளது. கொரோனா காரணமாக நாங்கள் தங்கி இருக்கும் இடத்தில் இருந்து எங்களை காலி செய்ய சொல்லி விட்டார்கள். என்னுடைய நண்பர்கள் அனைவரும் தங்களின் சொந்த நாட்டிற்கு திரும்பி விட்டனர். ஆனால் இந்தியாவில் விசா அளிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் நான் இந்தியா வருவதில் சிரமம் ஏற்பட்டது. எனது தந்தை ஏ.பி.வி.பி-யில் உள்ள லக்ஷ்மண் என்பவரை தொடர்பு கொண்டு, அவர் சிகாகோவில் உள்ள இந்திய தூதகரத்தை அணுகி அவசர விசா வழங்கி இந்தியாவிற்கு வரவழைத்துள்ளனர். மாணவர்களுக்கு உதவிய ஏ.பி.வி.பி-யிற்கு நன்றி", என்று கூறியுள்ளார்.

Full View

Similar News