தமிழகத்தில் டீ கடைகளை மூட முதல்வர் எடப்பாடி உத்தரவு!

தமிழகத்தில் டீ கடைகளை மூட முதல்வர் எடப்பாடி உத்தரவு!;

Update: 2020-03-25 10:54 GMT
தமிழகத்தில் டீ கடைகளை மூட முதல்வர் எடப்பாடி உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அகில இந்திய அளவிலான ஊரடங்கும், மாநில அளவிலான 144 தடை உத்தரவும் அமலில் உள்ளன. அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் பல இடங்களில் ஆங்காங்கு டீக் கடைகளும் திறந்து வைக்கப்பட்டன. டீக்கடை மட்டுமல்லாமல் அங்கு சுட..சுட பஜ்ஜி, போண்டா, வடைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்து வந்த நிலையில் அங்கு ஈ மொய்ப்பது போல கூட்டம் சேர்ந்தது.

இதனால் அங்கு கூட்டம் கூடி தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள எல்லா டீ கடைகளையும் இன்று மாலை 6 மணி முதல் மூட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மறு அறிவிப்பு வரும் வரை டீக்கடைகளை திறக்க தடை விதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

Similar News