ஓசூர் அருகே உள்ள பேகேபள்ளி கிராமத்தை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு.!

ஓசூர் அருகே உள்ள பேகேபள்ளி கிராமத்தை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு.!

Update: 2020-04-18 05:53 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள பேகேபள்ளி கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை யாரும் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படாத நிலையில் சென்னையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேகேபள்ளியில் தங்கி உள்ளார்.

சுகாதாரத் துறை மூலமாக இந்தத் தகவலை அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் அந்த கிராமத்தை முற்றிலும் தனிமைப் படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது. பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வீட்டுக்கே சென்று வழங்கிட தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த பேகேபள்ளியில் பகுதியை சேர்ந்த நபரின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

பேகேபள்ளி தரப்பு மற்றும் கிராமத்தில் வசிக்கும் மக்கள் முழுமையாக ஊரடங்கு கடைப்பிடித்து கடைப்பிடித்து சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது, இதை தொடர்ந்து அப்பகுதியில் கிருமி நாசினி தெளித்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Similar News