ராமர் கோயில் கோடிக்கணக்கான மக்களின் கூட்டுத் தீர்மானத்தின் சக்தி - பிரதமர் மோடி உரை!

ராமர் கோயில் கோடிக்கணக்கான மக்களின் கூட்டுத் தீர்மானத்தின் சக்தி - பிரதமர் மோடி உரை!

Update: 2020-08-05 09:09 GMT

சரயு நதிக்கரையில் ஒரு புதிய வரலாறு உருவாக்கப்படுவதை முழு உலகமும் கண்காணித்துக்கொண்டிருக்கிறது. இன்று முழு நாட்டுக்கு உணர்ச்சிகரமான தருணம்.

ஒரு கூடாரத்தில் தங்கியிருந்த ராமருக்கு தற்போது பெரிய கோயில் கட்டப்படவுள்ளது. ராமர் கோயிலுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்த அனைவருக்கும் நன்றிகள்.

இந்த வரலாற்றுத் தருணத்தைக் காண எனக்கு வாய்ப்பு அளித்த ராமர் அறக்கட்டளைக்கு நன்றிகள். இந்த ராமர் கோயில் நமது மரபுகளின் நவீன அடையாளமாக மாறும்.

இந்த கோயில் கோடிக்கணக்கான மக்களின் கூட்டுத் தீர்மானத்தின் சக்தியைக் குறிக்கும். இது எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கமளிக்கும்.' என விழாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

மேலும், 'ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு என்னை அழைத்ததில் மிகவும் பெருமைகொள்கிறேன். 'ஜெய் ஸ்ரீராம்' இந்த வார்த்தை இன்று அயோத்தியில் மட்டுமல்ல உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது.

இந்த புனிதமான சந்தர்ப்பத்தில் தேசத்தின் அனைத்து மக்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கும், ராமர் பக்தர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டு மக்களின் பல வருடக் காத்திருப்பு இன்று முடிந்துவிட்டது.