தர்மபுரி அருகே விவசாய நிலத்தில் ஐம்பொன் அம்மன் சிலை.. கையில் தாமரையுடன் கண்டெடுப்பு..!

தர்மபுரி அருகே விவசாய நிலத்தில் ஐம்பொன் அம்மன் சிலை.. கையில் தாமரையுடன் கண்டெடுப்பு..!

Update: 2020-04-10 07:12 GMT

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த குட்டூர் கிராமத்தை சேர்ந்த குமார் (30), இவர் தனது விவசாயி நிலத்தில் டிராக்டர் மூலம் உழவு செய்துள்ளார்.

அப்போது டிராக்டர் உழவு கருவியில் கல்போன்ற பொருள் சிக்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குமார் டிராக்டரை நிறுத்தி அந்த பகுதியில் கிராம மக்கள் உதவியுடன் தோண்டியுள்ளார்.

அப்போது ஒன்றரை அடி உயரத்தில் தாமரை மலரை கையில் ஏந்திய அம்மன் சுவாமி தென்பட்டது. ஐம்பொன்னால் ஆன அந்த சிலைக்கு அப்பகுதி மக்கள் மஞ்சள், குங்குமம் தடவி வழி பட்டனர்.

இதன் பின்னர் குமார் அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஸ் குட்டூர் கிராமத்திற்கு சென்று சாமி சிலையை மீட்டு நல்லம்பள்ளி தாசில்தார் சரவணனிடம் ஒப்படைத்தார்.

இந்த சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் மட்டுமின்றி வெளியூரை சேர்ந்தவர்களும் பார்க்க சென்றவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். மேலும், எங்காவது கோயிலில் திருடி வந்து இப்பகுதியில் சிலையை புதைத்து வைத்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Similar News