கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மசூதியில் பதுக்கல் : அப்பகுதியை சீல் வைக்க சென்ற காவல்துறையை தாக்கினர், இமாம் உட்பட 4 பேர் கைது.!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மசூதியில் பதுக்கல் : அப்பகுதியை சீல் வைக்க சென்ற காவல்துறையை தாக்கினர், இமாம் உட்பட 4 பேர் கைது.!

Update: 2020-04-12 13:05 GMT

மீரட்டின் ஜாலி கோதி பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த பகுதிக்கு சீல் வைப்பதற்கு காவல்துறையினர் மற்றும் மாவட்ட அதிகாரிகள் அங்கு சென்றனர். அந்த பகுதியில் பெரும் சச்சரவு ஏற்பட்டு பின்னர் முழுப் பகுதியும் சுற்றி வளைக்கப்பட்டது.

இது தொடர்பாக மீரட் காவல்துறையினர் நான்கு பேரை கைது செய்தனர். இதில் கொரோனா வைரஸ் நோயாளிகளை தங்க வைத்த மசூதியின் இமாம் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

அங்கு டி.எம். அனில் திங்ரா, எஸ்.எஸ்.பி அஜய் சாஹ்னி உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே இருந்தனர். இந்த சம்பத்தில் நகர மாஜிஸ்திரேட் சுஷாந்த் ஜெயின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

சுகாதாரப் பணியாளர் மற்றும் மாவட்ட நிர்வாகம் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தங்களால் முடிந்த பணிகளை செய்து வருகிறார்கள். ஆனால் இந்த முயற்சிகளை ​​சிலர் நாசமாக்குவதில் உறுதியாக உள்ளனர். நேற்று இரவு 4 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களில் மூன்று பேர் மீரட்டின் ஜாலி கோதி மசூதியில் தங்கியிருந்தனர்.

எனவே, கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த அந்த பகுதியை மூடுவதற்கு நிர்வாகம் முடிவு செய்தது. மேலும் சனிக்கிழமை காலை காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறை குழுவும் ஜாலி கோதி பகுதியை சுற்றி வளைத்தன. ஆனால் மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். பிறகு அந்த பகுதியில் உள்ள மக்கள் காவல்துறையினரைத் தாக்கினர்.



இதன் இடையே அங்கு உள்ள மக்கள் மற்றும் காவல்துறையிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதாக தகவலில் தெரிவிக்கின்றன. இதையடுத்து, இந்த சம்பவத்தை கட்டுப்படுத்த நான்கு காவல் நிலையங்களில் இருந்து காவல்துறையினரை வரவழைக்கப்பட்டது. பிறகு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, ஜாலி கோதியின் முழு பகுதியும் முற்றிலுமாக மூடப்பட்டது.

காவல்துறையினரால் அப்பகுதியில் ஒரு கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. மேலும் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற கூடாது என எச்சரிக்கப்பட்டு, அந்த பகுதி முற்றிலுமாக வேலி போடப்பட்டுள்ளது.

Source: https://www.opindia.com/2020/04/meerut-police-attacked-seal-area-coronavirus-patients-hiding-in-mosque/ 

Similar News