மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் கூட இழப்பு இல்லை - போலி சோதனை கருவி அனுப்பிய சீன நிறுவனத்தை தெறித்து ஓட விட்ட இந்தியா!
மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் கூட இழப்பு இல்லை - போலி சோதனை கருவி அனுப்பிய சீன நிறுவனத்தை தெறித்து ஓட விட்ட இந்தியா!;

முதலில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR), தனது கொள்முதல் முடிவுகளை எந்த அடிப்படையில் எடுக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியது முக்கியமாகும். பரிசோதனை என்பது கொவிட்-19க்கு எதிரான போரில் மிக முக்கியமான ஆயுதங்களில் ஒன்றாகும். இந்தப் பரிசோதனைக்குத் தேவையான அனைத்தையும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் செய்து வருகிறது. இதற்கு உபகரணங்களைக் கொள்முதல் செய்து, அவற்றை மாநிலங்களுக்கு வழங்குவது அவசியமாகும். உலக அளவில் இந்த உபகரணங்களுக்கு பெருமளவில் தேவை இருப்பதால், பல்வேறு நாடுகள் பண ரீதியிலும், ராஜாங்க வழியிலும் அவற்றை வாங்குவதற்கு தங்கள் முழு பலத்தையும், செல்வாக்கையும் ஈடுபடுத்தி வருகின்றன.
இந்த உபகரணங்களை வாங்குவதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட முதல் முயற்சிக்கு விநியோகஸ்தர்களிடம் இருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. இரண்டாவது முயற்சியில் தேவையான பதில் கிடைத்தது. இதில், உணர்திறன் மற்றும் தனித்திறன் அடிப்படையில், இரண்டு நிறுவனங்கள் (Biomedemics and Wondfo) கொள்முதலுக்காகக் கண்டறியப்பட்டன. இரண்டு நிறுவனங்களும் தேவையான சர்வதேச அளவிலான சான்றிதழைக் கொண்டிருந்தன.
Wondfo நிறுவனத்துக்காக மதிப்பீட்டுக் குழு நான்கு ஒப்பந்தப்புள்ளிகளைப் பெற்றது. அவை முறையே, ரூ.1204, ரூ.1200,ரூ.844, ரூ600 ஆகும். அதன்படி, ரூ.600 என்ற விலைக் குறிப்பு எல்-1 ஆகப் பரிசீலிக்கப்பட்டது. இதற்கிடையே, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் சீனாவில் உள்ள Wondfo நிறுவனத்திடம் இருந்து ஜிசிஐ மூலம் நேரடியாக உபகரணங்களைக் கொள்முதல் செய்ய முயற்சி மேற்கொண்டது. இருப்பினும், நேரடிக் கொள்முதலுக்கான விலைக் குறியீடுகளில் சில பிரச்சினைகள் இருந்தன;