காவல்துறையினருக்கு உணவு வழங்கிய தன்னார்வலருக்கு கொரோனா வைரஸ் பதிப்பு, என்ன கொடும சார்.

காவல்துறையினருக்கு உணவு வழங்கிய தன்னார்வலருக்கு கொரோனா வைரஸ் பதிப்பு, என்ன கொடும சார்.

Update: 2020-04-14 09:04 GMT

கோயம்புத்தூர் மாவட்டம் கோத்தகிரி லே அவுட் பகுதியை சேர்ந்த 61 வயது தன்னார்வலர் ஒருவர் சென்ற ஒரு வாரமாக துடியலூர் காவல் துறைக்கு உணவு வழங்கி வந்தார். மேலும் அவர்களோடு இணைத்து போக்குவரத்து சீரமைப்பு உள்பட பல வேலைகளை பார்த்துள்ளார்.

இந்த தருணத்தில் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இவரை கோயம்புத்தூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சேர்க்கத்தனர். இதனிடையே இவர் ஒரு வாரமாக காவல்துறைக்கு உணவு வழங்கியதால் அந்த காவல் நிலையத்தில் வேலை பார்க்கும் அனைவருக்கும் இன்று காலை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது.

அந்த தன்னார்வலருக்கு 61 வயது ஆகிறது. மேலும் அவர் சென்ற மார்ச் மாதம் 23 ஆம் தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்து இருக்கிறார். இவருக்கு நேற்று முன்தினம் காய்ச்சல் வந்ததால் அவரை பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார். பிறகு பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து துடியலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து அந்த காவல்துறையினருக்கு  பரிசோதனை நடத்தப்படுகிறது. அந்த தன்னார்வலரின் உறவினர், நண்பர்கள், அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு சளி மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்த தன்னார்வலர் காவல் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு சென்று இருக்கிறார் என்பது கூறப்படுகிறது.

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/coimbatore-a-coroner-has-been-checking-all-the-police-at-dudiyalur-in-coimbatore-vin-277995.html

Similar News