தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிப்பு!

Update: 2020-04-02 14:53 GMT

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது. இதில் இன்றும் மட்டும் 75 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 74 பேர் டெல்லியில் நடந்த இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவதால் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு அல்லது தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற இடங்களில் கைகளை சுத்தம் செய்வதற்கான தண்ணீர் சோர்வு ஆகியவை வைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளே நுழையும்போதும் வெளியில் செல்லும்போதும் கைகளை கழுவிய பிறகே அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி. ஆய்வகங்கள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் கொரோனா நோய் பற்றிய தகவல்களை 24 மணி நேரத்திற்குள் பொது சுகாதாரத் துறைக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மருத்துவமனைகள் கிருமிநாசினிகள் சுத்தம் செய்யப்பட்டு நோய்த்தொற்று ஏற்படாத வகையில் அறைகளை வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோய் தொற்று நடவடிக்கை எடுக்கத் தவறும் மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் 6 மாத சிறை அல்லது அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News