
2006ம் ஆண்டு இசையமைப்பாளராகத் தமிழ் திரையுலகில் தன் பயணத்தைத் துவங்கியவர் ஜீ.வி.பிரகாஷ். தொடர்ந்து முன்னணி இசையமைப்பாளராகத் திகழ்ந்து வந்தவர் 2013ம் ஆண்டு பள்ளி காலத்திலிருந்து காதலித்து வந்த பாடகி சைந்தவியைத் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் நேற்று இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் இருவருக்கும் பல்வேறு பிரபலங்களும் தங்களை வாழ்த்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.