வெறுப்பினை சுமந்து வாழ்வது தான் கம்யூனிச கொள்கையா? வெறுப்பு அரசியலில் நாகரீகத்தையும், பண்பையும், மனிதத்தையும் தொலைத்துவிட்டாரா தோழர் நல்லக்கண்ணு?
வெறுப்பினை சுமந்து வாழ்வது தான் கம்யூனிச கொள்கையா? வெறுப்பு அரசியலில் நாகரீகத்தையும், பண்பையும், மனிதத்தையும் தொலைத்துவிட்டாரா தோழர் நல்லக்கண்ணு?;

பிரபல பத்திரிக்கையாளர் திரு.பாண்டே அவர்கள் தந்தி தொலைக்காட்சி -யிலிருந்து வெளியேறி சாணக்யா என்ற சமூக வலைத்தள செய்தி நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார். அதன் முதலாம் ஆண்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் திரு.ரஜினிகாந்த், திரு.இலகணேசன் மற்றும் திரு. குமரி ஆனந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக சிறந்த அரசியல்வாதிகளுக்கு விருது வழங்கும் விழாவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழக அரசியலில் தேசியம், எளிமை, நேர்மை என்ற தலைப்புகளில் விருதுகள் அறிவிக்கபட்டிருந்தன. தேசியத்திற்கு திரு.இலகணேசன் அவர்களுக்கும், எளிமைக்கு திரு. குமரி ஆனந்தன் அவர்களுக்கும், நேரமைக்கு திரு. நல்லகண்ணு அவர்களுக்கும் என்று முன்பே அறிவிக்கப்பட்டு இருந்தது. இது குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டும் வந்தது.
இந்நிலையில் கொள்கை சார்ந்து இந்நிகழ்ச்சியில் திரு. நல்லகண்ணு பங்கேற்கவில்லை மற்றும் அந்த விருதினை பெறவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இது சமூக வலைத்தள வாசிகளுடமும், பொது மக்களிடத்தும் பெருத்த விவாதத்தையும், கேள்விகளையும் கிளப்பியுள்ளது.
இத்தனை ஆண்டு காலம் திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் மாறி, மாறி கூட்டணி வைத்த போது கொள்கை சமரசம் செய்தவர் தானே இந்த நல்லக்கண்ணு அப்போது கொள்கை உறுதியோடு எந்த கூட்டணியையாவது புறக்கணித்தாரா? இல்லைதானே, ஆனால் அனைத்து கட்சியினரும் கலந்து கொண்ட அரசியல் சார்பற்ற ஒரு விழாவில் நேர்மைக்காக வழங்கப்படும் விருதினை புறக்கணித்தது அவரின் அரசியல் நற்பண்பை கேள்வி குறியாக்கியுள்ளது.
அது மட்டுமில்லாமல் அரசியலில் நாகரீகம் கருதி, மாற்று சிந்தனை கொண்டவர்களுடன் மேடையை பகிர்ந்து கொள்ளும் பழக்கம் இந்திய அரசியல் வரலாற்றில் பல முறை நடந்துள்ளது. இத்தனை ஆண்டு கால அரசியல் அனுபத்திற்கும் பின்னரும் நல்லகண்ணு அரசியல் நாகரீகம் கற்கவில்லையோ இல்லை வெறுப்பு அரசியலை மூலதனமாக கொண்டு இயங்கும் கம்யூனிச சித்தாந்தத்தில் அதை தொலைத்து விட்டாரா என்று கேட்க தோன்றுகிறது.
ஒரு வேளை மாற்று சிந்தனை கொண்டவர் பாண்டே என்று வைத்துக்கொண்டால் கூட அவரே நல்லகண்ணு அவர்களை மரியாதை செய்யும் பொருட்டு இவ்விழாவிற்கு அழைத்தால் அதனை புறக்கணித்து, தோழர் நல்லக்கண்ணு தோழமையை என்ற ஒன்றை மறந்துவிட்டதாகவே கருதப்படுகிறது.