இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 396 ஆக உயர்வு!
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 396 ஆக உயர்வு!;

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்போதைய நிலவரப்படி 396 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மேலும், இதனால் இந்தியாவில் தற்போது வரை ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
முன் எப்போதும் இல்லாமல், நேற்று ஒரே நாளில் மட்டும் 81 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இணை செயலாளர் அகர்வால் தெரிவித்துள்ளார். இதனை தடுக்க மத்திய - மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் கொரோனா வைரசால் மூன்று பேர் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.