டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு புதுச்சேரிக்கு திரும்பிய நபர்களால் கொரோனா தொற்று அபாயம்.. களத்தில் குதித்த முதல்வர்..

டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு புதுச்சேரிக்கு திரும்பிய நபர்களால் கொரோனா தொற்று அபாயம்.. களத்தில் குதித்த முதல்வர்..

Update: 2020-04-01 11:17 GMT

டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு புதுச்சேரி திரும்பிய இருவருக்கு கோரோனா தொற்று இருப்பது இன்று உறுதியானது இதனையடுத்து கோரோனா தொற்று மேலும் பரவாமல் இருப்பது தொடர்பாக மாநில முதலமைச்சர் நாராயணசாமி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் சட்டப்பேரவையில் ஆலோசனை நடத்தினர்.

இதன் பின்னர் பேட்டி அளித்த முதலமைச்சர் நாராயணசாமி

டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் புதுச்சேரியில் இருந்து 17பேரும், காரைக்காலில் இருந்து 4பேரும் கலந்துகொண்டதாகவும் இதில் புதுச்சேரி சேர்ந்த 6பேரும், கரைக்காலை சேர்ந்த 3பேரும் கடந்த 24ஆம் தேதியன்று வீடு திரும்பி நிலையில் மீதமுள்ளவர்கள் டெல்லியில் தங்கி இருப்பதாக தெரிவித்தார் மேலும் புதுச்சேரியை சேர்ந்த 6பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் அரியாங்குப்பத்தை சேர்ந்த 2பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதேபோல் காரைக்காலை சேர்ந்த 3பேர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார் தொடர்ந்து பேசிய அவர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு வீடு திரும்பிய பின்னார் கோரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் யார், யாருடன் தொடர்பில் இருந்தார்கள் என்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என்றும்

டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் புதுச்சேரி மற்றும் காரைக்காலை சேர்ந்தவர்கள் யாராவது கலந்துகொண்டு திரும்பி வந்து இருந்தால் தானாக முன்வந்து அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் தானாக முன்வந்து மருத்துவ பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார் மேலும் கொரோனா அச்சம் பொதுமக்களுக்கு இருந்தால் அவர்கள் தொலைபேசி மூலம் தகவல் தந்தால் மருத்துவர்கள் அவர்களது வீட்டிற்கு வந்து பரிசோதனை செய்வார்கள் என்றும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடம் தொடர்பு உள்ளவர்கள் யார், யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் என்றார். இதேபோல் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தேவையெனில் ரானுவத்தின் உதவியை கோருவோம் எனவும் தெரிவித்தார்.

Similar News