உண்டியலில் சேமித்த வைய்த்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய சகோதரிகள், குவியும் பாராட்டுக்கள்.!
உண்டியலில் சேமித்த வைய்த்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய சகோதரிகள், குவியும் பாராட்டுக்கள்.!;

புதுச்சேரி மாநிலம், சாரம் சக்தி நகரைச் சார்ந்த சந்திரன் என்பவரின் மகள்களான கவிப்பிரியா மற்றும் மோகன பிரியா ஆகியோர் தாங்கள் உண்டியலில் சேமித்து வைத்த தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு கொடுக்க விரும்புவதாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து தெரிவித்தனர். அதனை தொடர்ந்து, தங்கள் உண்டியலில் சேமித்து வைத்திருந்த தொகையினை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.

சிறு வயதிலேயே சேமிக்கும் பழக்கமும், பிறருக்கு உதவிடும் சிறுமிகளை ஆட்சியர் பெரிதும் பாராட்டினார். மாவட்ட ஆட்சியர் அருண் சிறுமிகள் கவிப்பிரியா மற்றும் மோகன பிரியா ஆகியோர் உண்டியலிலிருந்து கொடுத்த தொகையை முதல்வரிடம் அளித்தார்.