மேற்கு வங்க மாநிலத்தில் சிறுபான்மை அரசியலுக்காக கைவிடப்பட்ட சுகாதார விதிகள், தொற்று அதிகமாக வாய்ப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் சிறுபான்மை அரசியலுக்காக கைவிடப்பட்ட சுகாதார விதிகள், தொற்று அதிகமாக வாய்ப்பு

Update: 2020-04-12 04:35 GMT

மேற்கு வங்க மருத்துவர்கள் மன்றம் (WBDF) மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் மருத்துவர்கள் தங்கள் வாழ்க்கையை பணயம் வைத்து இந்த சமுதாயத்தை காப்பாற்ற போராடுகிறார்கள், எனவே கொரோனா தொடர்பான தகவல்களை வெளியிடுவதிலும், மருத்துவர்களுக்கு ஆதரவான, பாதுகாப்பான சூழ்நிலைகளை ஏற்படுத்துவதிலும் ஒரு பின்னடைவு இருக்கக் கூடாது என கூறியுள்ளனர்.

மேலும் , "சந்தேக நபர்களைப் பிரிப்பதை உறுதி செய்தல், நேர்மறை நோயாளிகள், துல்லியமான பரிசோதனை, சோதனை மற்றும் ஆய்வு போன்ற சில விஷயங்களில் நடைபெறும் தவறுகளையும் பட்டியலிட்டுள்ளது.

10 அம்சங்கள் குறித்து கடிதம் எழுதியுள்ள அவர்கள் தங்கள் கடைசி கோரிக்கை அம்சத்தில் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை சரியாக சேகரிப்பதுடன், அவை வெளிப்படையாக இருக்க வேண்டும், மேலும் அந்த தரவுகள் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட வசதியாக இருக்க வேண்டும். இது தொடர்பாக உலகத்துக்கு பொய்யான தரவுகளை அளிப்பதற்கு வாய்ப்பு அளிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளது.

முன்னதாக மம்தா சொல்லும் புள்ளி விபரங்கள், மருத்துவர்கள் அளிக்கும் தரவுகள், அலுவலக ஆவணங்களில் பதிந்துள்ள விபரங்களுக்கிடையே முரண்பாடுகள் காணப்படுவதாகவும், இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் கேள்விகள் எழுப்பி, மம்தா அரசுக்கு கடிதம் மூலம் விளக்கம் கேட்டதாகவும் நேற்று முன்தினம் செய்திகள் வந்தன.

குறிப்பாக டெல்லி மாநாட்டில் பங்கேற்று வந்தவர்கள் குறித்த பாதிப்பு தரவுகளை மம்தா மூடி மறைப்பதாகவும் அதனால்தான் அவர் முரண்பட்ட தகவல்களை அளிக்கிறார் என்றும் கூறப்பட்டது.

மேலும் முஸ்லிம் சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளான மெட்டியாபிரூஸ், ராஜா பஜார், நர்கெல் டங்கா, டாப்சியா, இக்பல்பூல் போன்ற பகுதிகளில் ஊரடங்கு நடைமுறைகள் மீறப்பட்டதாகவும், அங்கு எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி அனைத்து இறைச்சி கடைகளும் திறந்து வைக்கப்பட்டதாகவும் உள்துறை அமைச்சகம் சார்பில் பேரிடர் தடுப்பு மேலாண்மை நிர்வாகத்தினர் தனக்கு வந்த புகார்களின் அடிப்படையில் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் சுகாதார விதிகளை பின்பற்றாமல் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் சில சமூக விழாக்கள் அனுமதிக்கப்பட்டது ஏன் என்பது குறித்தும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டாக்டர்களுக்கும், மத்திய அரசுக்கும் நேரிடையாக பதில் சொல்ல முடியாத நிலையில் உள்ள மம்தா வழக்கம் போல மத்திய அரசு மேற்கு வங்கத்துக்கு எந்த உபகரணங்களும் தரவில்லை என்றும் போதிய நிதி தரவில்லை என்றும் ஒப்பாரி வைத்து வருகிறார். ஆனால் சிறுபான்மை அரசியல் செய்வதற்காக மம்தா கடைபிடிக்கும் தந்திரங்களை இப்போது மருத்துவர்களே விமர்சிக்கும் நிலைக்கு மேற்கு வங்க அரசு ஆளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகள் ஆபத்து மிகுந்த மஞ்சள் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுய்ள்ளதால் அந்த பகுதிகளில் இன்மேல் மம்தா அரசியலுக்கு இடமில்லாமல் நடக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இது மம்தாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிள்ளதாகவும் கூறப்படுகிறது. 




 


Similar News